பக்கம்:அதிசயப் பெண்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கத்திரிக்காய் ஜூரம் 51

கொடுக்கப் போகிறதில்லை’ என்று சபதம் செய்து கொண்டார். என்னிடம் இந்த விஷயங்களே யெல்லாம் சொல்லித் தம் சபதத்தை நானும் காப்பாற்ற வேண்டும் என்றார். அதனால்தான் நான் உங்களுக்குக் கொடுக்க முடியவில்லை” என்று சொல்லி வருத்தப்படுபவனைப் போலப் பாசாங்கு செய்தான்.

அவன் சொல்வதெல்லாம் பொய் என்பது வைத்தியருக்கா தெரியாது? அவர் பேசாமல் வந்த வழியே திரும்பி வீட்டுக்குப் போனார். போகும்போதே, இந்த மடையன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்; பார்க்கலாம். எனக்கும் ஒரு காலம் வரும் என்று எண்ணிக்கொண்டார்.

இரண்டு மாதங்கள் ஆயின. ஒருநாள் மட்டியப்பன் அவசர அவசரமாக வைத்தியரிடம் ஓடிவந்தான். “ஐயா, ஐயா! என் மகளுக்குக் கடுமையான ஜூரம் அடிக்கிறது. எங்கள் வீட்டில் கைப்பழக்கமான கஷாயமெல்லாம் போட்டுக் கொடுத்தோம். ஜூரம் நிற்கவில்லை. கல்யாணமாகி ஒரு வருஷத்தான் ஆச்சு, ஐயா; நீங்கள் வந்து பார்த்துக் காப்பாற்றவேண்டும்” என்று அழாக் குறையாகச் சொன்னான்.

“அப்படியா! நீ நல்ல மனிதனாயிற்றே! உனக்குக் கஷ்டம் வரக்கூடாதே. நீ பயப்படாதே. நான் எப்படியும் சொஸ்தம் செய்துவிடுகிறேன். நான் கேட்கும் மருந்துச் சரக்குகளை மாத்திரம் விடாமல் வாங்கித் தா” என்று சொல்லி அவன் வீட்டுக்குப் போனார், நோயாளியின் கையைப் பார்த்தார். பிறகு ஒரு மாத்திரையைத் தேனில் குழைத்துக் கொடுத்துவிட்டு, “இந்த ஜூரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/53&oldid=1104967" இலிருந்து மீள்விக்கப்பட்டது