பக்கம்:அதிசய மின்னணு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அதிசய மின்னணு ஒளிரும் குழல் விளக்குகள் : இவ் விளக்குகளை இன்று பட்டி தொட்டிகளிலும் காண்கின்ருேம். இவை ஒரு வாயு வால் நிரப்பப்பெற்ற மின்னணுக் குழல்கள். சாதாரண மின் விளக்குக் குமிழ்களில் ஒருகோடியே உள்ளது; இவை ஒரு புறமே அடைக்கப்பெற்றுள்ளன. ஆல்ை, ஒளிரும் குழல் விளக்குகளில் பக்கத்திற்கு ஒன்ருக இரண்டு கோடிகள் உள்ளன ; இவை மின்னுேட்டத்தை அடைகின்றன. ஒவ் வொரு கோடியினின்றும் கம்பிகள் மின்னேட்டத்துடன் இணைக்கப்பெறுகின்றன; இக் கம்பிகள் சுருண்டுள்ள கம்பி இழைகளைத் தாங்கிக் கொண்டுள்ளன. ஓர் ஒளிரும் குழல் விளக்கில் பக்கத்திற்கு ஒன்ருக இரண்டு கம்பி இழைகள் உள்ளன. இந்தக் கம்பி இழை களைத் தாங்கும் சிறிய கம்பிகளின் கோடிகள் நேர்-மின்வாய் கள் ஆகும். ஒளிரும் குழல் விளக்குகள் மின்னணுக்குழல் களினின்றும் வேறுபட்டவை. காரணம், இங்கு முக்கிய பணியை நிறைவேற்றுவது கம்பி இழையினின்றும் நேர் - மின் வாய்க்குப்போகும் பிரவாகம் அன்று அஃது அக் குழலின் வேலையைத் தொடக்குவதுடன் நின்று விடு கின்றது. ஒளிரும் குழலின் முக்கிய பணி ஒளியைத் தருவது; அது வேலை செய்வதைக் காண்போம். ஒளிரும் குழல் விளக்குகள் முன்னும் பின்னும் செல்லும் இருதிசை மின்னேட்டத்தால் வேலை செய்கின்றன. இக் குழலில் இருகோடியிலும் இழையிருப்பதால், குழலினுள் சதா மின்னேட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதில் ஒரு துளி பாதரசமும் இருக்கின்றது. இப் பாதரசம் குழலினுள் வரும் மின்னேட்டத்தால் வாயுவாக மாற்றப் பெறுகின்றது. இழைகளினின்றும் மின்னணுக்கள் பாய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/60&oldid=735150" இலிருந்து மீள்விக்கப்பட்டது