பக்கம்:அதிசய மின்னணு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎台 அதிசய மின்னணு விடுதலை செய்கின்றன. எதிர்-மின் வாயின்மீது பிரகாசிக்கும் ஒளியின் உறைப்பிற் கேற்றவாறு மின்னணுக்களும் அதிக மாக விடுதலையாகின்றன. படத்தைத் துருவிப் பார்த்து ஒளி படம் 30. விமானப்படம் அனுப்பப்பெறுவதைக் காட்டுவது 1. இந்த ஊசிமுனே ஒளிக்கற்றை படத்தைத் துருவிப் பார்க் & Dig (scans); .ே இந்தப் படம் ஒளிக்குழலினுள் பிரதிபலிக்கப்பெறுகின்றது; .ே இந்த ஒளிக்கற்றை ஒரு மெல்லிய அருவி வடிவில் படமாக ஒதுக்கப்பெறுகின்றது. உடனுக்குடன் எதிர்-மின்வாயில் பிரதிபலிப்பதால், அதில் விடுதலையாகும் மின்னனுக்களின் அளவும் படத்தின் வெண்மை-கருமை நிறத்திண்மைகளைப் பொறுத்தே சரியாக அமைகின்றது. இந்த மின்னணுக்கள் நேர்-மின்வாய்க்குப் பாயவே, படம் குழலை விட்டு மின்சாரமாக வெளியேறு கின்றது. இந்த மின்சாரம் ஒரு திட்டமான கோலத்தில் (pattern) பாய்வதால் அது சைகைச் செய்தி (signal) என்று வழங்கப்பெறுகின்றது. வன்மை குறைந்த இந்த சைகைச் செய்திகளை மற்ருெரு குழல் பெருக்கி அவற்றை வானுெலி அலைகளாக எங்கும் அனுப்புகின்றது. நியுயார்க்கிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/64&oldid=735154" இலிருந்து மீள்விக்கப்பட்டது