பக்கம்:அதிசய மின்னணு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் துறையில் 65. உயர்ந்த அதிர்வு எண்ணைக்கொண்ட மின்ளுேட்டத் தைப் பயன்படுத்தும் பல தொழிற்சாலைகளில் பல கம்பி வலைகளையுடைய பிலேயோட் ரான்களைப் பயன்படுத்தி அத் தகைய மின்ளுேட்டத்தை உற் பத்தி செய்கின்றனர். வானுெலி நிகழ்ச்சிகளை அனுப்புவதில் _ தான் இத்தகைய உயர்ந்த அதிர்வு-எண்ணைக்கொண்டே மின்ளுேட்டம் பயன்படுகின் றது என்பதை நாம் சாதாரண மாகக் கருதுகின்ருேம். ஆயின், இன்று உலகிலுள்ள எல்லா படம் 35. பல கம்பி வல்களைக் கொண்ட பிலேயோட்ரான் வானெலி நிகழ்ச்சிகளையும் அனுப்புவதைவிடத் தொழில் துறைகளில்தான் அதிமான உயர்ந்த அதிர்வு-எண் மின்னேட்டம் பயன்படுகின்றது. என்று சொல்லலாம், தொழில்துறையில் பயன்படும் மற்ருெருவகைக் கதிர் கள் புதிர்க்கதிர்களாகும். பெரிய தொழில்துறைப் புதிர்க் கதிர்ப்பொறிகள் கோடிக்கணக்கான வோல்ட் அழுத்தமுள்ள ஆற்றலைச் சுமந்து செல்லலாம்; இக்கதிர்கள் பல அங்குல கனமுள்ள எஃகினையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. இக்கதிர்களால் பார்க்கப்பெறும் செயல்கள் பிலிமில் பதிவு செய்யப்பெறுகின்றன. இம்முறையால் நாம் கனமான வார்ப்புப்பொருள்கள் உடைப்பு, அல்லது துளைகளின்றி உள்ளனவா என்பதை உறுதிசெய்துகொள்ள முடிகின்றது. போர்க்கப்பல்களிலுள்ள காப்புத் தகட்டினைச் சோதிக்கவும், புகைவண்டிப் பொறிகளைச் (railway engines) சோதிக்கவும் இம்முறை பெரிதும் பயன்படுகின்றது. அ. மி.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/73&oldid=735164" இலிருந்து மீள்விக்கப்பட்டது