பக்கம்:அத்தை மகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 'ஊம், ஆச்சு....அது சரி. என்னைக் கண்டு அவ ஏன் அப்படி. ஓடினா? பயமா ? என்று விசாரித்தான் சுந்தரம்.

'பயமாவது! அத்தானைக் கண்டதும் வெட்கமாயிராதா அவளுக்கு? பழைய ரத்னம்னு நினைச்சுக்கிட்டியா? அவ இப்போ ரொம்ப மாறிப் போனா.... ரத்னம்..ஏ ரத்னம்.......

தாய் அழைத்தாள். ஆனால் அவள் முன் வந்தால் தானே ! எதிர்பார்த்து விழி திறந்திருந்த அவனுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டது. காதுகள் கைவளைக் கல கல ஒலியை இழுத்து அறிவித்தன. கண்கள் அதிர்ஷ்டம் செய்யவில்லை போலும் ! அவள் எந்த மூலையிலோ, அல்லது ஜன்னல் மறைவிலோ, நின்று தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு நன்கு தெரிந்தது. எனினும் அவள் உருவம் அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

'சரி. நேரமாகுது. காப்பி சாப்பிடவா. தோசை காப்பி யெல்லாம் சாப்பிட்டுவிட்டு அப்புறம் சாவகாசமாக் குளிக்கலாம்’ என்று சொல்லி உள்ளே போனாள் அத்தை.

அவனும் போனான். அடுப்பங்கரையில் தானே இருப்பாள்; இப்பொழுது சந்தித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அவனுக்கு. பயனில்லை. அங்கும் ஏமாற்றமே!

'எந்த இருட்டிலே பம்மிட்டா அவ? முன்னைப் போலே இல்லை தான். உம் ரொம்ப ரொம்ப மாறிப் போனா ரத்னம்; அப்ப பார்த்தேனே, ஆனா நல்லாப் பார்க்கலே. அழகா, ஜோராத்தான் வளர்ந்திருக்கா' என்று மனம் புலம்பிக் கொண்டிருந்தது.

முன்பு--அவன் சிறுவனாகத் திரிந்தபோது; அவளும் கேலி பேசியும் கேலிக்கு உள்ளாகியும் அலைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/12&oldid=975920" இலிருந்து மீள்விக்கப்பட்டது