பக்கம்:அநுக்கிரகா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அநுக்கிரகா

"ஆமாம். நீங்க சொன்னதெல்லாம் ஏற்கெனவே பேப்பர்லே பார்த்தோம், தலைவர் அவங்களைத்தான் முதல்லே பார்த்தாருன்னாங்க. மந்திரியாப் போடலாம்னு கூடப் பேப்பர்லியே போட்டிருந்தான்," என்று கூடச் சிலர் ஒத்துப் பாடினார்கள். பொன்னுரங்கத்தின் முயற்சி முழு வெற்றி அளித்தது. "கொஞ்சம் இருங்க! பார்ட்டி ஹெட் குவார்ட்டஸுக்கு ஒரு எஸ்.டி.டி. போட்டு மாம்பழக் கண்ணன் சார் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிட்டுக் கையெழுத்துப் போடறேன்," என்று கொஞ்சம் டபாய்த்த கள்ளப்பள்ளம் காமாட்சியை, "மாம்பழம் அனுப்பித்தானே நானே கிளம்பி வந்திருக்கிறேன். போன் போட்டா உங்களைத்தான் கோபிச்சுக்குவாரு," என்று சவடாலாக அடித்துச் சமாளித்தான் பொன்னுரங்கம். அப்புறம் போன் பேசுகிற துணிவு அவளுக்கு எங்கிருந்து வரும்? உடனே அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டாள்.

பொன்னுரங்கம் தனது கையெழுத்து வேட்டைத் திக் விஜயத்தை வெற்றிக்ரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பினான். அறிக்கை, போட்டோஸ்டெட் - பிரதி எடுக்கப்பட்டது. பிரஸ்மீட் இரவு டின்னருடன் ஏற்பாடாயிற்று, மறுபடியும் ரோஸ் கார்டன்ஸ் ஹோட்டல் விருந்து நடந்தது. மறுநாள் காலைப் பத்திரிகைகளில் 'பெண்கள் சார்பில் அநுக்கிரகாவுக்கே மந்திரி பதவி தரப்பட வேண்டும். ம.மு.க, பெண் எம்.எல்.ஏ.க்களின் ஏகோபித்த அறிக்கை, கட்சித் தலைவருக்கு வேண்டுகோள்'- என்று செய்திகள் தடபுடலாகப் பிரசுரமாயின. முத்தையாவுக்கு ஒரே ஆச்சரியம். "உன்னை என்னமோ ஏதோன்னு நினைச்சேன். நீதாம்ப்பா ரியல் கிங் மேக்கர்" என்று அவனை வியந்தார். தேர்தலில் வென்றதும், அதிகாலையிலேயே தலைவரை முதலில் பார்த்து மாலை போட வைத்தது தொடங்கி, அவன் செயல்பட்ட வேகத்தையும், விவேகத்தையும் பார்த்து வக்கீலான முத்தையாவே அயர்ந்து போனார், 'சீஸண்டு பாலிட்டீஷியன்' என்பார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/110&oldid=1264008" இலிருந்து மீள்விக்கப்பட்டது