பக்கம்:அநுக்கிரகா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113

அடுத்து பத்து நாட்களுக்குப் பின் கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இருபது கேபினட் ரேங்க் அமைச்சர்களில் அநுக்கிரகாவும் ஒருத்தி யாயிருந்தாள். வீட்டு வசதி, தாழ்த்தப்பட்டோர் நலன், சமூக நலம் ஆகிய மூன்று துறைகளுக்கும் மந்திரியாக அவள் பதவி ஏற்றிருந்தாள்.

கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் முடிந்ததும் கட்சித் தலைவரைத் தனியே சந்தித்தபோது அவர் அவளுக்குச் சில அறிவுரைகளை கூறினார். அவளுக்கு மட்டுமே பிரத்தியேகமான அறிவுரைகள் அது:

"நான் சொல்றதைத் தப்பா நினைக்காமச் சரியாப் புரிஞ்சிக்கணும் அம்மா நீ! உங்க ஃபாதரோட சமஸ்தான அரண்மனையான, ஆவாரம்பட்டு ஹவுஸிலே இனிமே நீ தங்கியிருக்கக் கூடாது. அமைச்சர்களுக்கான வீடுகளிலே ஒண்ணை உனக்கும் 'அலாட்' பண்ணச் சொல்றேன். நீ உட்னே அங்கே குடியேறிடணும். உன்னோட 'சோஷலிஸ்டிக் இமேஜ்' வளரணும்னா 'மிட்டா மிராசுகளும், அரண்மனைவாசிகளும் மந்திரியாகும் மகத்துவம் பாரீர்'னு இன்னிக்குக் காலம்பற மறவன் குரல்லே உன்னைப்பத்தி எழுதியிருக்கிறமாதிரி இனிமே யாரும் எழுதாமப் பார்த்துக்கணும். ஏழைங்க குடிசைகளை அடுக்கு மாடி வீடாக்கி அளித்தல் மாதிரி முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்ற நீ வேகமாகச் செயல்பட்டு ஏழைகளின் மேலும், குடிசைவாசிகள் மேலும், உன்னிடம் தோற்றுப்போன கனிவண்ணனை விட உனக்குத்தான் அதிக அக்கறை உண்டுங்கிறதை அவசர அவசரமாக நிரூபிக்கணும். நீ ஆவாரம்பட்டு சமஸ்தானத்து உரிமையாளர். சர்.வி.டி. முத்தையாவோட அருமைப் பொண்ணுங்கிறதைப் பாமர ஜனங்கள் மறக்கிற மாதிரி இனிமே நடந்துக்கணும். இல்லாட்டி மிட்டா மிராசுன்னே புலம்பிக்கிட்டிருப்பாங்க. அவங்களை மறக்கடிக்கறாப்பல சமூக நலம், ஸ்லம் கிளியரன்ஸ், தாழ்த்தப்பட்டோர் நலம்னு நீயாக ஓடியாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/115&oldid=1264050" இலிருந்து மீள்விக்கப்பட்டது