பக்கம்:அநுக்கிரகா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

115

நான் உங்களோட சேர்ந்து வசிச்சா நல்லா இருக்காது. ரொம்ப ஆடம்பரமாத் தோணும். அரண்மனைவாசின்னு எதிர்க்கட்சிகள் என்னைக் கிண்டல் பண்ணும்னு சீப் மினிஸ்டரே அபிப்பிராயப்படறாரு. நான் நாளையிலிருந்து கவர்ன்மெண்ட் எனக்கு அலாட் பண்ற வீட்டுக்குத் தனியாக் குடி போகப் போறேன்! நீங்க தப்பா நெனைச்சுக்கக் கூடாது. வழக்கம்போல டிரைவர், சமையலாள், தோட்டக்காரங்க, வேலையாட்கள் எல்லாம் இங்கேயே இருப்பாங்க. உங்களைக் கவனிச்சுப்பாங்க. இந்த அரண்மனைக் கார் கூட எனக்கு வேண்டாம். அரசாங்கக் கார், ஃபோன் எல்லாம் கிடைச்சுரும்."

முத்தையாவுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை அவருக்கு, அவள் மந்திரியாகி அந்த வீட்டில் தங்கப் போவதானால், அந்த வசதிகளும் அந்த வீட்டின் சூழலும், அந்த வீட்டுக்கான சுற்றுபுற வசதிகளும் பெருகும் என்று கனவு கண்டுகொண்டிருந்த அவருக்கு அது எதிரிடையாக இருந்தது.

"இப்படி இந்த வீட்டிலே நான் இருக்கிறவரை ஜனங்க என்னை உங்களோட மகளாகவும் ஆவாரம்பட்டு சமஸ்தான இளைய வாரிசாகவும் தான் நினைப்பாங்க. அது எங்க கட்சியோட 'சோஷலிஸ்டிக் இமேஜைப்' பாதிக்கும்."

"ஜெயிச்சா திருப்பதிக்கு வந்து கல்யாண உத்சவம் பண்றோம்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டோமே, நினைவிருக்கா?"

"அதை என் சார்பிலே நீங்களே போய்ப் பண்ணிட்டு வந்துடுங்கப்பா. நானே வந்தால் 'பெண் மந்திரி திருப்பதியில் சாமி கும்பிட்டார்னு' பேப்பர்ல போடுவாங்க. ஒரு மாதிரி இருக்கும், நல்லா இருக்காது. தவிர எனக்கு உடனடியா நெறைய வேலை இருக்கு. சிடியிலே ஸ்லம் இருக்கிற ஏரியாக்களிலே எல்லாம் புறம்போக்கு நிலங்களையும், தனியார் நிலங்களையும் நியாய விலையில் அரசே எடுத்துக்கொள்ள அதிகாரம் வழங்கும் அவசரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/117&oldid=1264103" இலிருந்து மீள்விக்கப்பட்டது