பக்கம்:அநுக்கிரகா.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அநுக்கிரகா

என்று ஜாக்கிரதை என்னும் தலைப்போடு ஒரு போர்டு எழுதி மாட்டியிருந்தார்.

அதுக்கிரகா மந்திரியாகி அந்த வீட்டைவிட்டு வெளியேறி அரசு இல்லத்திற்குப் போன தினத்தன்று ஆத்திரத்தோடு அந்த போர்டை அவர் மாட்டியதைத் தோட்டக்காரனும் டிரைவரும் மற்ற ஊழியர்களும் பார்த்திருந்தனர். யாராவது தெரிந்தவர்கள், உறவினர்கள், "அநு எப்பிடி இருக்கா? எப்போ கல்யாணம்?" என்பது போலவோ வேறு விதமாகவோ அவரிடம் குசலம் விசாரித்தால், "யாரைக் கேட்கிறீங்க? அநுக்கிரகாங்கிற பேரிலே எனக்கு ஒரு மகள் இருந்தாள். ஆக்ஸ்போர்டிலே படித்தாள். படிச்சா... இப்போ அதே பேரிலே ஒரு சீப் பாலிட்டீஷியன்தான் இருக்கான்னு மட்டும் தெரியும்"-என்பதாக வெட்டினாற் போல் பதில் சொன்னார். ஒரு சாதாரண லாபத்துக்காக ஏழை வேஷம் போடும் அரசியல்வாதிகள் அத்தனை பேர் மேலும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. செய்து கொண்ட பிரார்த்தனைப்படி தான் மட்டும் திருப்பதி போய்க் கல்யாண உற்சவத்தை நடத்திவிட்டு வந்தார் அவர். வாக்குறுதியைச் சுலபமாக மறந்து கைவிடுகிற அரசியல்வாதிகளின் பழக்கப்படி ஏழுமலையானுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மகள் மறந்து விட்டது அவருக்கு விநோதமாகப் படவில்லை.

தெரிந்த பலர், முத்தையா ஸினிக் ஆகிவிட்டார் என்றார்கள். வேறு சிலர் என்றைக்குமே அவர் ஒருமாதிரி 'எக்ஸெண்டரிக்' தான் என்றார்கள். அநுக்கிரகா அமைச்சரான நாலாவது மாதமோ என்னவோ பொன்னுரங்கமும், புலவர் கடும்பனூர் இடும்பனாரும் ஏதோ ஆண்டு விழா என்று வசூல் நோட்டு இரசீதுப் புத்தக சகிதம் அவரைத் தேடி வந்தார்கள். உள்ளே வந்து விட்ட அவர்களை 'தயவு செய்து கொஞ்சம் எங்கூட வர்ரீங்களா?' என்று எழுப்பி வாசல் கேட் வரை அழைத்துச் சென்று, "பாருங்க! நல்லாப் பார்த்துக்குங்க," —என்று அங்கே முகப்பில் எழுதி மாட்டியிருந்த 'அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/124&oldid=1265106" இலிருந்து மீள்விக்கப்பட்டது