பக்கம்:அநுக்கிரகா.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

123

பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக உள்ளே நுழையக் கூடாது,' என்ற போர்டைக் காண்பித்து விட்டுத் திரும்பிப் பாராமல் உள்ளே போய்விட்டார்.

"என்னய்யாது? இந்த முத்தையாவுக்குப் புத்தி கித்தி பிசகிப் பைத்தியம் பிடிச்சிருக்கா?" —என்று பொன்னுரங்கம் புலவரிடம் கேட்டான்.

புலவர் சிரித்தார். "மகள் மந்திரியானதிலிருந்தே இப்படி ஆயிட்டாருன்றாங்க," என்றார் புலவர்.

வீட்டில் குடும்பப் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் அநுக்கிரகாவின் பழைய பெரிய படத்துக்குக் கீழே பிரிய முள்ள மகள் அதுக்கிரகா-தோற்றம் என்று அவள் பிறந்த தேதியையும்—தலைமறைவு என்று அவள் எம்.எல்.ஏ. ஆன தேதியையும் எழுதி வைத்திருந்தார். எலெக்ஷன் சமயத்தில் எடுத்த அநுக்கிரகாவின் மற்றொரு படத்திற்குக் கீழே நம்பத்தகாத அரசியல்வாதி அநுக்கிரகா—தோற்றம்—எம்.எல்.ஏ. ஆன நாள். மறைவு-இன்னும் மறைய வில்லை—என்றும் எழுதியிருந்தார். இதையெல்லாம் ஆவாரம்பட்டு ஹவுஸ் ஊழியர்களே வேடிக்கையாகவும், விநோதமாகவும் நோக்கினார்கள். அவருக்குச் சித்தப் பிரமையோ என்று கூடச் சந்தேகப்பட்டார்கள். ஆனால் உண்மையில் அவர் மிகவும் தெளிவாயிருந்தார். பிடிவாதமாயிருந்தார். வைராக்கியமாயிருந்தார். வாய்க்கு வாய் சொன்னார்: "இன்றைய இந்தியாவில் ஏழைகளும் பணக்காரர்களும் அவர்களை வைத்து அவர்களால் அவர்களுக்காகப் பிரச்சினைகளும் அரசியலும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நல்ல மனிதர்கள் இல்லை. அரசியலுக்கு ஏழையும், பணக்காரனும் தேவைப்படலாம். ஆனால் சமூக மேம்பாட்டுக்கு நல்ல மனிதர்கள் மட்டுமே தேவை. மனிதர்களை உருவாக்கும் அரசியலும் அரசியல்வாதிகளும் இன்று இங்கே துரதிருஷ்டவசமாக இல்லை. ஏழைகளை ஏழைகளாகவே வைத்து அரசியல் பண்ணக் கிளம்புகிறவர்களும் பணக்காரர்களைக் கொடியவர்களாகக் காட்டியே பணக்காரர்களையும் மிரட்டி அரசியல் நடத்துகிற கூட்டத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/125&oldid=1265108" இலிருந்து மீள்விக்கப்பட்டது