பக்கம்:அநுக்கிரகா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

129

"அநு வந்திருக்கேன்ப்பா ..."

வா, என்றோ வரவேற்கும் சாயலிலோ எதுவும் நிகழவில்லை.

"என் மேலே உங்களுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கு."

இதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

"என்னை நீங்க பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்! ஐயாம் வெரி ஸாரி டாட். கட்சிக் கொள்கைக்கு நான் கட்டுப்பட வேண்டும். ஐயாம் எ பிரிஸனர் ஆஃப் சர்கம்ஸ்டன்சஸ், இட் வாஸ் அவர் கேபினெட் டெஸிஷன்."

இப்போது முதல் முதலாக வாய் திறந்தார் அவர்.

"பீட்டரைக் கொள்ளையடித்துப் பாலுக்குக் கொடுத்ததாக ஒரு பழமொழி உண்டு."

"குடிசைப் பகுதி ஒழிப்புக்காக நாங்க நிலம் கையகப் படுத்திக் கொள்ளணுமே?"

"யூ காண்ட்! நான் கோர்ட்டிலே வழக்குப் போடுவேன். சேலன்ஞ் பண்ணுவேன்,"

"அதுக்கு ஆர்டனன்ஸ் போட்டிருக்கோம்ப்பா.... ' சேலஞ்ச் பண்ண முடியாது."

"நான் சேலஞ்ச் பண்றேன்.. ஜெயிக்கிறேன். நீங்கள்ளாம் கவர்மெண்டா நடத்தறீங்க? சும்மா ஓட்டுப் பிடிக்கிற ஸ்டண்டுக்காக என்னென்னமோ பண்றீங்க! அதுக்குப் பேரு அவசரச் சட்டம். குடியிருக்கிறவன் வீட்டைப் பிடுங்க ஒரு அவசரச்சட்டம்.. தெருவிலே நிற்கிறவனைக் கோபுரத்துக்கு உயர்த்த ஒரு சட்டம். கோபுரத்திலே இருக்கிறவனைக் குப்புறப் பிடிச்சுத் தள்ள ஒரு அவசரச் சட்டம்."

"நான் மந்திரிங்கிற முறையிலே இப்போ இங்கே வரலே அப்பா! உங்க மகள் அநுக்கிரகாவர்த்தான் வந்திருக்கேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/131&oldid=1265114" இலிருந்து மீள்விக்கப்பட்டது