பக்கம்:அநுக்கிரகா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அதுக்கிரகா

 “இவளை உங்க ம.மு.க.வில் எப்படியாவது மெம்பராக்கிடணும் என்று ஒரேயடியாய் முத்தையா வேண்டிக் கொண்டபோது, பொன்னுரங்கம் மிரண்டான். மலைத்தான்.


2

கடைசியில் முத்தையாவுக்குத்தான் வெற்றி. கனிவண்ணனிடம் பொன்னுரங்கத்திற்கு உள்ள விரோதத்தைப் பயன்படுத்தி எப்படியோ சம்மதிக்க வைத்தார் அவர்.

"நீ எவ்வளவோ பாடுபட்டு இந்த ஏரியாவிலே கட்சியை வளர்த்தே.. அடி வாங்கி உதை வாங்கிக் கைக் காசைச் செலவழித்து நீ எல்லாத்தையும் பண்ணினாப் பிரயோசனம் கிடைக்கிற சமயத்திலே கனிவண்ணன் வந்து பிடிச்சுக்கிட்டான்." .

"கனிவண்ணன் மட்டுமில்லீங்க. மாம்பழக் கண்ணன் கதை என்னவாம்? பஜார்லே மிளகாமண்டி வச்சிருந்தவன். அதைக் கூடக் கவனிக்காமல் பிஸினஸைத் தம்பி கையிலே விட்டுட்டு இங்கே வந்து செயலாளர் பதவியைப் பிடிச்சுக் கிட்டான்.

"ஏம்பா பொன்னுரங்கம். கனிவண்ணன், மாம்பழக் கண்ணன் இதெல்லாம் என்னப்பா பேரு? கனிவே இல்லாதவனைக் கனிவண்ணன்னு கூப்பிடறீங்க? கசப்பே உருவான வனை மாம்பழக் கண்ணன்கிறீங்க?

"சும்மா ஒரு பப்ளிஸிட்டிக்காகப் போஸ்டாலே போடறதுக்கு மஜாவா இருக்கும்னு இவங்களா வச்சுக்கிட்ட பேருங்க; சுடலைமுத்துங்கிற பேரைக் கனிவண்ணன்னு மாத்திக்கிட்டான். மாடசாமிங்கிற பேரு. மாம்பழக்கண்ணன் ஆயிடிச்சு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/14&oldid=1255949" இலிருந்து மீள்விக்கப்பட்டது