பக்கம்:அநுக்கிரகா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

17

அவளும் உடனே, " நன்றி, பொன்னுரங்கம் என்று தன்னைத் திருத்திக்கொண்டு சொன்னாள். முத்தையா திருப்திப்பட்டார். அடுத்தவாரமே நெல்லுப் பேட்டை மண்டி மைதானத்தில் நடக்க இருக்கும் ஒரு பொதுக்கூட் டத்தில் அவள் மேடை ஏறிப் பேச வேண்டியிருக்கும் என்று பொன்னுரங்கம் கூறிய போது அநுக்கிரகாவுக்குப் பயமும் பதற்றமும் ஏற்பட்டன.

அதைக் கவனித்த முத்தையா, "ஒண்ணும் பயப்படாதே அநு! ஸ்மார்ட்டா இலட்சணமா ஒரு சின்னப் பொண்ணு மேடையேறிச் சுமாராப் பேசினாக்கூட ஆடி . யன்ஸ் பொறுத்துப்பாங்க.. "என்னை மாதிரி ஒருத்தன் , பிரமாதமாகப் பேசினாலும் சாதிக்க முடியாததை 'நீ ரெண்டு சிரிப்பிலேயே சாதிச்சுக்கலாம், என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.


3

முதல் தரமான, அறிவாளிகளைவிடச் சுமாரான அறிவும் முதல் தரமான அழகுமுள்ள பெண்கள் 'அரசியலில் பிரகாசிக்க முடியும் என்று முதலிலேயே சரியாக எடை போட்டது முத்தையாதான்.

'பொன்னுரங்கம்போல் கன்னங்கள் வற்றிப் பள்ளம் விழுந்த வறட்சிப் பேர்வழிகளையும், மாம்பழக்கண்ணன், கனிவண்ணன் போல் உடலில் இடுப்பும், கழுத்தும் எங்கிருக்கின்றன . என்றே தெரியாத மிதப்பான செழித்த புள்ளிகளையுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும். மக்களுக்கு, பளீரென்று டிம்பிள் கபாடியா புடவையைக் கட்டிக் கொண்டு மேடை ஏறினாற் போன்று. ஓர் இளம் பெண் மின்னல் மேடை ஏறினால், அதிகமாக ரசிக்கும் 'என்றார் அவர், பொன்னுரங்கம் ஓரளவு. அவரது கருத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/19&oldid=1255961" இலிருந்து மீள்விக்கப்பட்டது