பக்கம்:அநுக்கிரகா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

19

"செலவு மட்டும் கொஞ்சம் தாராளமாகப் பண்ணினீங்கன்னா, எம். எல். ஏ. மட்டுமென்ன, . அம்மாவை மந்திரி யாகவே ஆக்கிடலாம்.

முத்தையாவுக்கு அவன் உறுதிமொழி இதமாய் இருந் தது. இப்படி ஓர் ஆள் கட்டு இருந்தாலொழியக் கட்சியில் தன்னை மேலே எழவிடாமல் ஒடுக்கிய கனிவண்ணனைப் பழிவாங்கப் பொன்னுரங்கத்தினாலும் முடியாது. தங்கள் கட்சி அரசியலுக்கு மிகவும் அதிகத் தகுதிகளாக—வேண்டாத—படிப்பு, நாகரிக மெருகு, ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலம், எல்லாமே இருந்தும் தயங்காமல் அநுக்கிரகாவை அவன் கட்சியில் சேர்த்துவிட்டது இதற்காகத்தான். மாம்பழக் கண்ணனும் கனி வண்ணனும் சந்தேகப்பட விடாமல் தான் இதைப் பொன்னுரங்கம் செய்திருந்தான். ஆனாலும் , அவர்கள் சந்தேகப்பட்டார்கள், தங்களுக்குள் இரகசியக் குரலில் பேசிக் கொள்ளவும் செய்தார்கள்,

"இன்னாப்பா நம்ம பொன்னுப் பய கட்சிக்காசு எங்கிருந்தோ ஒரு வெள்ளைக் கோழி புடிச்சாந்திருக்கான்?" என்று தங்கள் பரிபாஷையில், கனி வண்ணன் மாம்பழக் கண்ணனிடம் கேட்க, மாம்பழக் கண்ணன், வெள்ளைக் கோழி மட்டும் இல்லேப்பார் படு ஷோக்கான பொட் டைக் கோழி வேறே, என்று கண் சிமிட்டிச் சிரித்தபடி பதில் கூறியிருந்தான். இப்படி அவர்கள், பேசிக் கொண்டபோது, பொன்னுரங்கமும் கட்சி அலுவலகத்தில் , இருந்தான், ஆனால் மறுக்கவோ, எதிர்த்துப் பேசலோ முயலவில்லை. அவர்கள் இம்மாதிரி விஷயங்களை இப்படித்தான் பேசிக்கொள்வார்கள். அவர்களை மாற்ற முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். தன்னை வெறும் தொண்டனாகவே விட்டு விட்டு மாம்பழக் கண்ணனும், கனி வண்ணனும் மட்டும், முன்னேறி விட்டது. பற்றிப் பொன்னுரங்கத்தினுள் நீண்ட நாளாகப் புகைந்து கொண்டிருந்த புகைச்சல் இப்போது விசுவரூபம் எடுத்திருந்தது. பழிதீர்ப்பவனுக்கே உரிய தற்காலிகமான அடக்க ஒடுக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/21&oldid=1256064" இலிருந்து மீள்விக்கப்பட்டது