பக்கம்:அநுக்கிரகா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அநுக்கிரகா

 -தோடு அவன் காத்திருந்தான். கொடிகள், தோரணங்கள் கட்டும் அடி மட்டத்துக் கட்சித் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கிய அவன், இன்னும் அப்படியே இருக்கக், கனிவண்ணன் நாலு வீடு, இரண்டு சின்ன வீடு, கையில் இலட்சக் கணக்கிலே ரொக்கம் என்று பூதாகாரமாக வளர்ந்து விட்டான். மாம்பழக் கண்ணனுக்குச் சாராயக் கடை., கள்ளுக்கடை ஏஜென்ஸியில் பணம் வெள்ளமாக ஓடியது. பண பலமும், ஆள் பலமும் இல்லாமல் தான் அவர்களை எதிர்க்கப் பயந்து இதுவரை பொன்னுரங்கம் பேசாமல் இருந்தான். இப்போது அந்த இரண்டு பலமும் முத்தையா வடிவில் அவனுக்குக் கிடைத்திருந்தன.

ஆனால் பண பலமும், ஆள் பலமும் முத்தையாவாலும், அநுக்கிரகாவினாலும் கிடைத்தும் ஆரம்ப காலத்தில் சில சிக்கல்களையும், தர்ம சங்கடங்களையும் அவனால் தவிர்க்க முடியவில்லை . . மிகவும் படித்த யுவதியான நாகரிக அநுக்கிரகாவினால் அவனுடைய கட்சி நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை, கட்சியின் ஊழியர்கள் அவளைக் கண்டதும் மிரண்டே போனார்கள். அவளோ ஆங்கிலத்தில் பேசி அவர்களை மேலும் மிரளச் செய்தாள்.

"இவரு சாமிக்கண்ணு! நம்ப கட்சியோட பதினேழாவது வட்டத்துக்குத் தலைவர்!" என்று பரட்டைத் தலை ஆளை அநுக்கிரகாவுக்குப் பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தினால், “ஹலோ!" என்றோ , "நைஸ் டு மீட் சாமிக் கண்ணு," என்றோதான் அவள் பதிலுக்குக் கையை நீட்டினாள்.

ஓர் இளம் பெண் கூச்சமில்லாமல் கைகுலுக்க முன்வருவது இங்கிலாந்திலும், பம்பாயிலும் சகஜமாக இருக்கலாம். ஆனால் சென்னையில்—அதுவும் . ம. மு. க. போன்ற ஒரு கட்சியின் அடி மட்டத்துத் தொண்டர்கள் மத்தியில் சகஜமாய் இல்லை. மருண்டு பயந்து ஒதுங்கினார்கள். பொன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/22&oldid=1256066" இலிருந்து மீள்விக்கப்பட்டது