பக்கம்:அநுக்கிரகா.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அநுக்கிரகா

மற்றவர்களைப் பாதித்து விடாமல் இருக்கவும் பயந்து பயந்து நிறையச் சிரித்து நிறையக் கீழறங்கி விட்டுக் கொடுத்து நிறையப் பணம் செலவழித்துப் பாடுபட வேண்டியிருந்தது. அப்பாவோ அவள் ம.மு.க.வில் மேலே வரவேண்டுமென்பதற்காகப் பணத்தைத் தண்ணீ ராகச் செலவழித்தார்.

தமிழ்ப் புலவர் கடும்பனூர் இடும்பனாரிடம் மேடைப் பேச்சுக்கு அவசியமான பாடங்களைத் தினசரி டியூஷன் படிக்க வேண்டியிருந்தது, அவர் ஒவ்வொரு விவரமாகச் சொன்னார் : '

"முதல்லே மேடையிலேயும் கீழேயும் உள்ள முக்கியமானவங்க அத்தனை பேரையும் அவங்க பெயரை மரியாதையாச் சொல்லி விளிக்கணும்.

"மரியாதையாச் சொல்லி விளிக்கிறதுன்னா எப்படி?

கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் அண்ணன் பொன்னுரங்கம் அவர்களே! முன்னிலை ஏற்றிருக்கும் மரியாதைக்குரிய மரியரத்தினம் அவர்களே, வட்டச் செயல் வீரர் வடிவேல் அவர்களே! எனது சதையின் சதையாக விளங்கும்.சகோதர சகோதரிகளே...!

"சதையின் சதையாக — நரம்பின் நரம்பாக — தோலின் தோலாக — இதெல்லாம் என்னங்க ஒரே மட் டன் ஷாப் லாங்வேஜா இருக்கே...டீஸண்டா ஏதாவது : சொல்லுங்களேன்,

"டீஸண்ட் கீஸெண்ட்டெல்லாம் சரிபட்டு வராதுங்க... பேச்சிலே அங்கங்கே தந்தி விலாசம் மாதிரி முத்திரையைப் பதிச்சாத்தான் மக்கள் கை தட்டுவாங்க."

"முத்திரையைப் பதிக்கறதுன்னா ...?

தியாகராஜ கீர்த்தனைங்கள்ளே அவரு பேரு  முத்திரையா  வருமில்லே, அதுமாதிரி, டக்னு ஜனங்களுக்குத்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/28&oldid=1256090" இலிருந்து மீள்விக்கப்பட்டது