பக்கம்:அநுக்கிரகா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27

தந்தி பாஷையிலே சொல்றாப்பல 'சதையின் சதையான'ன்னு ஒரு லயன் குடுத்தீங்கன்னாத்தான் உடனே கைதட்டுவாங்க.

"அப்பிடியா? என்னை மாதிரிப் படிச்ச ஆட்கள் அந்தவிதமாப் பேசினா நல்லா இருக்குமா?

"நீங்க அப்பிடிப் பேசாட்டித்தான் நல்லா இருக்காது! ஜனங்களும் உங்களை நம்ப இயக்கத்தோட சேர்த்து அடையாளமாப் புரிஞ்சுக்க மாட்டாங்க.

"அதாவது எப்படி யாரை எந்த வரிசையிலே விளிச் சாலும், கடைசியிலே மக்களை விளிக்கிறப்ப, 'சதையின் சதையான மக்களே'ன்னு மக்களோட சதையைப் பிடிச்சு இழுத்தாகணும்கிறீங்க.

"கரெக்ட்! ரொம்ப . நல்லாப் புரிஞ்சுக்கிட்டிங்க. சொற்பொழிவைத் தொடங்குறதுக்கு முந்தி மக்களை அப்பிடி அடைமொழி குடுத்து ஆரம்பிக்கணும்" ---அவளுடைய கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் விளக்கிக் கொண்டிருந்தார் புலவர்.

"முடிக்கிறப்ப எப்படி முடிக்கணும்?"

"குறிப்பாக் கூட்ட ஏற்பாடு செய்து பேச வாய்ப்பளித்தவர்களுக்கும் கேட்ட மக்களுக்கும் நன்றி சொல்லி முடிச்சாப் போதும்.”

"அப்ப சரி! நான் மானேஜ் பண்ணிக்கறேன்..' என்று புலவரை விடைகொடுத்து அனுப்பத் தயாரானாள் அநுக்கிரகா. புலவர் விடவில்லை .

"ஆரம்பிக்கிறது, முடிக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டீங்க நடுவிலே என்ன பேசறதுன்னு கேட்டுக் கலியே?"

“அது ம,மு.க, பாலிஸி புரோபகேண்டா பிரசுரத்தைப் பார்த்து நான் தயார் பண்ணிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/29&oldid=1256094" இலிருந்து மீள்விக்கப்பட்டது