பக்கம்:அநுக்கிரகா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

29

எதிரிங்களைத் தாக்க நமக்குச் சாக்குப் போக்கு இல்லாமப் போயிடும். அவங்க நம்மைத் தாக்கற மாதிரி ஒரு போக்கை நாமே உண்டாக்கிட்டு அப்புறம், அவங்களை வகையா ஒரு பிடிபிடிக்கணும்."

"அப்போ ஊர்வலம் சென்ற பாதையில் எதிரிகள் கல்லெறிந்ததால் கலவரம் மூண்டதுன்னு வர்ற நியூஸெல்லாம்கூட இப்படித்தானா?

"ஒரு கல்லெறியும் இல்லாமே, ஒரு எதிர்ப்பும் இல்லாம நம்ம ஊர்வலம் அமைதியா நடந்திச்சுன்னா பத்திரிகைக்காரனுவ அதைப் பெரிசு பண்ணாம விட்டுடுவாங்க. பத்திரிகைக்காரங்க பெரிசு பண்ணனுங்கிறத்துக்காக நாமே கவ்லெறிய ஆள் செட்அப் பண்ணி நம்ம எதிரிங்க எறிஞ்சது போலக் கிளப்பி விடறது தான். அரசியல்லே சகஜம்தான் இதெல்லாம். இப்படி ஒண்ணு நடக்காட்டி, ' கட்சிக் - கண்மணிகள் அமைதியையும் கண்ணியத்தையும் கட்டிக்காத்து இயக்கத்தின் நற்பெயரைப் போற்றிப் பேணிட வேண்டுகிறேன்.' அப்படின்னு தலைவருக்கு அறிக்கைவிட , வாய்ப்பே இல்லாமப் போயிடும்.."

"ஆக தலைவர், 'அடிக்கிறாப்பல் அடி! நான் அழறாப்பல அழறேன்' கிற பாணியிலே அறிக்கை விடுவாருங்கிறீங்க?

"தங்கச்சி, இதெல்லாம் போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க."

அநுக்கிரகா புலவருக்கு விடை கொடுத்து அனுப்பினாள். சர். வி.டி. முத்தையா புலவருக்கு விடை கொடுக்கும்போது : ஞாபகமாகக் கவரில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைப் போட்டுத் தந்து வழியனுப்பினார். அது மாமூல்.

"அவ்வப்போது வந்து போயிட்டிருங்க, புல்வரே! அதுவுக்கு நீங்க தான் மேடை ஆசான் மாதிரி —என்றார் முத்தையா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/31&oldid=1256253" இலிருந்து மீள்விக்கப்பட்டது