பக்கம்:அநுக்கிரகா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அநுக்கிரகா

பேட்டை மைதானத்தில் போய் இறங்க வேண்டியதைச் சகித்துக் கொள்வதுகூட இயலாத காரியமாயிருந்தது. கூச்சமும் பயமும் கொண்டான் அவன், அந்தக் கட்சியில் தலைவர் ஒருத்தர் தான் ஏ. சி. காரில் வருவார். மற்றவர்களும் அதுமாதிரி வருவது அவருக்குப் பிடிக்காது. அதை எல்லாம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறினான் பொன்னுரங்கம், அவனுக்குச் சங்கடமாய் இருந்தது.

" சொன்னாலும் உங்கப்பாவுக்குப் புரிய மாட்டேங்குது. எடுத்த எடுப்பிலேயே இந்த ஆடம்பரமெல்லாம் கூடாது. ஏழையோ இல்லையோ ஏழை வேஷம் போடறதும் ஏழைக்காகப் பரிந்து பேசறதும் இன்னிக்கு அரசியல்லே முக்கியம். இல்லாட்டி, 'மேட்டுக் குடி'ன்னு சொல்லியே எழுந்திருக்க முடியாதபடி கீழே அமுக்கி விட்டுடுவாங்கம்மா.

"என்ன செய்யணும்ன்றீங்க தலைவரே இப்போ?

"இங்கேயே காரைக் கொஞ்சம் தள்ளி நிறுத்திட்டு மைதானத்துக்கு நடந்தே போயிறலாம்! யாரும் பார்க்க மாட்டாங்க, மேடை பக்கத்திலே தான்.

“இத்தினி நேரம் ஏ. சி. யிவே வந்துட்டு திடீர்னு கீழே இறங்கி நடந்தேன்னா வேர்த்து விறு விறுத்து என் மேக்கப் எல்லாம் கலைஞ்சு போயிடுமே!

“நீங்க மேக்கப்பிலேயே குறியா இருக்கீங்க, நாளைக்கி எலக்ஷன்லே நின்னு ஜெயிக்கணுமேன்னு கவலையில்லே உங்களுக்கு."

"மேக்கப்புக்கும்' எலெக்ஷனுக்கும் என்ன சம்பந்தம் தலைவரே?

"உப்பரிகைவாசி.--ஏ. சி. ரூம் அரசியல் பண்றவங்கன்னு பேராயிட்டுதோ, அப்புறம் இந்த ஜனங்ககிட்ட ஓட்டு வாங்கறது படு கஷ்டம் அம்மா, கனிவண்ணனை எதிர்த்து நீங்க நிற்காமே-- நம்ம கட்சி டிக்கெட்டிலே கனிவண்ணனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/36&oldid=1256267" இலிருந்து மீள்விக்கப்பட்டது