பக்கம்:அநுக்கிரகா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

39

கொச்சைப்படுத்தி, "இன்னா தலைவரே! சௌக்கியமா?, என்று விசாரிக்க வேண்டியிருந்தது. ஒரு முறை ஓர் எதிர் பாராத இடத்தில் பொன்னுரங்கத்தைச் சந்திக்க நேர்ந்து தன் நினைவே இல்லாதவளாக அவனிடம் போய், "ஹலோ! வாட் ஏ ப்ளஸெண்ட் சர்ப்ரைஸ்?" என்று ஆரம்பித்தபோது, அவன் மிரண்டு, “இன்னான்றீங்க இப்போ? என்று பதிலுக்குக் கேட்ட பின்புதான், அநுக்கிரகாவுக்குச் சுயஉணர்வு வந்து உறைத்தது. மொழி, மேனர்ஸ், பழக்கம்— இவைகளில் வேறு வேறான உலகங்களில் அவள் பழக வேண்டியிருந்தது. அதில் தடுமாற்றங்கள், குழப்பங்கள் நேர்ந்தன. இரண்டு குதிரைகளின் மேல் ஒரே சமயத்தில் சவாரி செய்வது போலிருந்தது. இருந்தும் முத்தையா உற்சாகமூட்டினார். தைரியப்படுத்தினார். அதனால் எப்படியோ சமாளித்தாள்,

ஒரு நாள் ம.மு.க. பார்ட்டி ஆபீஸுக்கு ஜீன்ஸ் பனியனுடன் கிளம்பிவிட்ட அவளைத் தடுத்து நிறுத்தி, "அநு, இதெல்லாம் சினிமாவிலே பார்த்தா ரசிப்பாங்க, விசிலடிச்சு வியப்பாங்க, வாழ்க்கையிலே ஒத்துக்க மாட் டாங்க. ஒரே வார்த்தையிலே, ராங்கி பிடிச்சவ, 'திமிர்க் காரின்னுடுவாங்க. ஜீன்ஸோட போவாதே, என்றார் முத்தையா, ஆரம்பத்தில் இப்படி நிறையத் தவறுகளைச் செய்தாள் அவள், பின்னால் வரவரச் சுதாரித்துக் கொண் டாள். இந்தியாவும், தமிழ்நாடும் . அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தன.

'இன்றிருக்கும் மொழி சம்பந்தமான விரோதங்கள் பலதரப்பட்டவை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பிரதேச மொழிகள் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் நடுவிலுள்ள விரோதம்; ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், எந்த மொழியுமே சரியாகத் தெரியாதவர்களுக்கும் நடுவில் உள்ள விரோதம்; இந்தி தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் நடுவேயுள்ள விரோதம்; இப்படி விரோதங்களின் பட்டியல் மட்டுமே. இருந்ததே ஒழியச் சிநேகிதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/41&oldid=1256643" இலிருந்து மீள்விக்கப்பட்டது