பக்கம்:அநுக்கிரகா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

41

"அது சரி, நாம இதை மக்களுக்காக மக்கள் முன்னாலே பேசப்போறோமா, அல்லது சிங்கம், புலி, சிறுத்தை, யானைகளுக்காக ஏதாவது ஜூவிலே போய்ப் பேசப் போறோமா?. உங்க பேச்சிலே ஒரு இடத்திலேயாவது, 'மக்களே!' 'ஆண்களே!' 'பெண்களே!' ன்னு கூப்பிட மாதிரி வரலீங்களே?"

"மக்களையே சிங்கம்; புலின்னு வர்ணிக்கிறோம். அதான் அர்த்தம்."

"இந்த நாட்டிலே இன்னிக்கு மக்கள் யாரும் சிங்கம், புலி மாதிரி இருக்கிறதாத் தெரியலீங்களே. கழுதை மாதிரியில்லே பொறுமையா இருக்காங்க? சுமக்கறாங்க...?"

அநுக்கிரகாவின் இந்தக் கேள்விக்குப் புலவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அவள் அத்துடன் அவரை விட்டு விடவில்லை. மேலும் விடாமல் துளைத் தாள்.

"அனிமல் லைஃப் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும் புலவரே. சில புத்தகங்கள் படிச்சிருக்கேன் - கிர் ஃபாரஸ்ட் லயன், ஹிமாலயன் டைகர், - ராயல் பெங்கால் டைகர், ஆப்ரிகன் ஸஃபாரின் எல்லாம் தான் அதிலே வருமே ஒழிய, 'புறநானூற்றுப் புலி'ன்னு ஒரு வெரைட்டியை நான் . கேள்விப்பட்டது இல்லியே? அது என்னங்க அது? கொஞ்சம் விளக்கித்தான் சொல்லுங்களேன் எனக்கு."

விவரம் புரியாமல் தான் அவள் இப்படிக் கேட்கிறாள். ஆனால் புலவருக்கு அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று தோன்றியது. "தமிழ்லே இந்த மாதிரி எல்லாம் ஆவேசமாப் பேசினாத்தான் ரசிப்பாங்க. ஆக்ரோஷமா இருக்கும். கைத்தட்டல் வாங்கலாம்."

"பேசற சப்ஜெக்ட் என்னன்னு தெரியாமல் சிங்கமே, புலியே., கழுதையே, கரடியேன்னு . மணிக்கணக்கா முழங்கினா எப்படி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/43&oldid=1256650" இலிருந்து மீள்விக்கப்பட்டது