பக்கம்:அநுக்கிரகா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அநுக்கிரகா

"சப்ஜெக்டைப் பத்தி யாரு கவலைப்படறாங்க? சும்மாப் பூப் பூவா வாண வேடிக்கை கணக்கா வார்த்தை களை அள்ளி விட்டுட்டு ஜால வித்தை பண்ணினா, மூணு மணி நேரம் கூடக் கேப்பாங்க.

இப்படிக் கூட்டம் கேட்க வரும் தமிழ் மக்களைப் பற்றிப் புலவர் கூறிய 'கான்ஸெப்ட்' அநுக்கிரகாவிற்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது.. அதனால் புலவரிடம் அதைப்பற்றி அவளும் மேற்கொண்டு விவாதிக்கவில்லை. புலவரும் பேசாமலே விட்டுவிட்டார். ஒன்றை மட்டும் வற்புறுத்தினார்.

"தந்தி விலாசம் மாதிரி சுருக்னு நம்ம கட்சிக்காரன் அடையாளம் புரிஞ்சுக்கிற எடம் சதையின் சனதயான தமிழ்ப் பெருமக்களே!' என்பதுதான். தொடங்கறப்பவும், முடிக்கிறப்பவும் அதை எப்பிடியும் கொண்டாந்துடணும், என்றார் புலவர் இடும்பனார்.

நெல்லுப்பேட்டை மைதானத்துக் கூட்டத்துக்குப் புறப்படும் போது எதற்கும் கையோடு இருக்கட்டும் என்று புலவர் எழுதிக் கொடுத்திருந்த கத்தையை எடுத்து வைத் திருந்தாள் அநுக்கிரகா. வேறு வழியில்லாமல் எதுவும் தோன்றாமல் போனால், அதிலிருந்து கொஞ்சம் படித்து விடலாம் என்று எண்ணினாள். கடைசி பட்சமாகத்தான் அந்த நினைப்பு அவளுக்கு இருந்தது. அது அவளுக்கு முதல் மேடை அனுபவம்.

அநுக்கிரகாவுக்கு முன்பாகப் பேசிய ஒவ்வொரு பேச்சா எனும் அவளுக்கு முன்பின் அறிமுகமே இல்லாத புது நபர்களாயிருந்தும் அவளை வானளாவப் புகழ்ந்தார்கள் . வார்த்தைகள் பைசாவுக்குப் பத்து சதவிகிதம் என்று தாராளமாக வந்தன.

"அழகே உருவாக, அடக்கமே வடிவாக மேடையில் அமர்ந்திருக்கும் அண்ணி அநுக்கிரகா அவர்களே!" —என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/44&oldid=1256654" இலிருந்து மீள்விக்கப்பட்டது