பக்கம்:அநுக்கிரகா.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அநுக்கிரகா

கடந்துபோய் இருந்தன. தங்கள் புகழ், தங்களைச் சார்ந் தவர்களின் புகழ் அல்வது, ப்ளஸ் பாயிண்டுகள் கடுகாசு இருந்தாலும் மலையாக்கப்பட்டன. தங்கள் எதிரிகள் தங்களைப் பற்றிக் கூறும் குறை விமரிசனங்கள் மலையாக இருந்தாலும் கடுகாக்கப்பட்டன. எதிரிகளின் கடுகத்தனை குறைகளை மலையாக்கி விவரிக்கத் தயங்காத கட்சிகள் தங்களது மலையத்தனை குறைகளைக் கடுகு போல் சுருக்கிக் கொண்டு திருப்திப்பட்டன.

ஒரு ம. மு. க. உறுப்பினர் என்ற முறையில் அல்லாமல் சாதாரணமாகவே அவளுக்கு இது புரிந்தது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் பாதுகாத்து, தன் எதிரிகளைக் கண்மூடித்தனமாகக் கண்டித்தது, தனக்கு வேண்டியவர்களின் மாபாதகங்களைக் கூட மறைக்கவும் மறக்கவும் உதவியது. தன்னெதிரிகளின் சிறு தவறுகளைக் கூடப் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாகப் பார்க்க முயன்றது. அநுக்கிரகா அந்த மேடையில் அமர்ந்திருந்தபோது, இதை மிகவும் நன்றாகவே கண்டு உணர்ந்தாள்,


7


கூட்டம் அலை மோதியது. நெல்லுப்பேட்டை மைதானத்தில் எள் தூவினால் கீழே தரையில் விழ இடைவெளி இல்லை . மரங்கள், கட்டிடங்களின் மாடிகள், சுவர்களில் கூட ஏறி நின்று கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. என்ன பேச வேண்டும் என்ன வரிசையில் பேசவேண்டும், என்று நினைக்க நினைக்க மறந்தன. நினைத்த வேகத்தை விட அதிகச் சுருக்கில் அவை மறந்தது கண்டு அநுக்கிரகா பதறினாள். சுதந்திரத்திற்குப் பிறகு பிள்ளையார் சுழி போட்ட பாமர மக்களின் கட்சியாகிய ம. மு. க. வில் பரம்பரை சமஸ்தானாதிபதி போன்ற ஆவாரம்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/46&oldid=1256662" இலிருந்து மீள்விக்கப்பட்டது