பக்கம்:அநுக்கிரகா.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா, பார்த்தசாரதி

45

ஹவுஸ் கோடீஸ்வரர் சர் வி.டி, முத்தையாவின் ஒரே மகள் அத்தனை தூரம் மேல் நாட்டில் போய்ப் படித்தவள் ஏன் சேர்ந்திருக்கிறாள், என்ன பேசப் போகிறாளோ, எப்படி பேசப் போகிறாளோ, எதில் பேசப் போகிறாளோ தமிழிலா, ஆங்கிலத்திலா என்றெல்லாம் ஆவலோடு காண வந்த கூட்டம் பயங்கரமாகக் கூடியிருந்தது.

நேரம் ஆக ஆக அவளுக்கு எல்லாமே மறப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. எதுவுமே நினைவு வரவில்லை. பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டு அவன் காதோடு காதாக, "சீக்கிரமா என்னைப் பேசவிட்டால் என்ன? எனக்கு எல்லாமே மறந்துவிடும் போல இருக்குத் தலைவரே, என்று முடுக்கினாள்.

அவனோ நிர்தாட்சண்யமாக மறுத்தான். "சிறப்புப் பேச்சாளர்னாக் கடைசியிலேதாம்மா பேசணும். அப்பத் தான் ஒரு 'சுகிர்' இருக்கும், என்றான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு மணிக்கணக்கில் மேடையில் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் புது அனுபவமாய் இருந் தது. யாரோ தொடர்ந்து தன் தலைமேல் குப்பைக் கூளத்தை இடைவிடாமல் வாரிக் கொட்டுவதைச் சிரித்த முகத்தோடு சகித்துக்கொள்ள நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு உட்கார்ந்திருப்பது போல் அவள் இருக்க நேர்ந்தது.

மேடையேறிப் பேசுவது தான் அலுப்பூட்டுகிற காரியம் என்று நேற்றுவரை அவள் நினைத்திருந்தாள், கேட்பது பேசுவதை விடப் பல மடங்கு அலுப்பூட்டுகிற காரியம் என்று இன்று இப்போதுதான் முதன் முதலாக அவளுக்குப் புரிந்தது. . கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சுப் பேசும் சிறப்புப் பேச்சாளர்கள் பலர் மூளை குழம்பிப் போய் ஜன்னி கண்டவன் மாதிரி உளறுவதற்கு உண்மையான காரணமே அவர்கள் முந்தி முப்பது பேச்சாளரைக் கேட்க நேரிடுவது தானோ என்றுகூட அவளுக்கு இப்போது தோன்றியது. சில கெட்டிக்காரச் சிறப்புப் பேச்சாளர்கள், தாங்கள் பேசுகிற நேரம்வரை கூட்டத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/47&oldid=1256663" இலிருந்து மீள்விக்கப்பட்டது