பக்கம்:அநுக்கிரகா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அநுக்கிரகா

துக்கே வராமல், சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் காரில் வந்து இறங்குவதற்குக் காரணம் இருப்பது இப்போது அவளுக்குப் புரிகிறமாதிரி இருந்தது..

ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவள் அப்படிச் செய்ய முடியாது, 'ராங்கிக்காரி' என்று கெட்ட பேராகிவிடும். திணறிப் போய் வேர்க்க விறுக்க மேக்கப் கலைந்து வறட்சியோடு மேடையில் உட்கார்ந்திருந்தாள்.

கடைசியில் ஒன்பது மணிக்கு மேல் பொன்னுரங்கம் அவளைப் பேச அழைத்தான்.

“அழகுத் தென்றலாக, அறிவுப் புயலாக, இயக்க இடிமுழக்கமாக அண்ணியார் இப்போது பேசுவார்கள், என்று அவன் அறிவித்ததும் கைகால் பதற, நாக்கு உள்ளேயே பசை போட்டு ஒட்டினாற்போல் ஒட்டிக் கொள்ள எப்படியோ சமாளித்து எழுந்திருந்து மைக்முன் வந்து நின்றாள். ஒரே கரகோஷம், பட்டாஸ் ஒலி முழக்கம். விசில் ஒலிகள். ஒரே சமயத்தில், தென்றல், புயல், இடி முழக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும், எப்படிப் பேசுவதென்று புதிராக இருந்தது. ஒன்றுமே தோன்றவில்லை. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எப்படியோ சுதாரித்துச் 'சதையின் சதையான...' என்று அவள் தொடங்கியதுமே மைக்குக்கும் அவளுக்கும் இடையே ஒருத்தன் தலையை நீட்டி, ஆறாவது வட்டம் அம்மிக் குப்பம் ம, மு.க. சார்பில் அண்ணியாரவர்களுக்கு இந்த ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிவிக்கிறேன்' என்று புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவள் கழுத்தில் போட வந்தான். அவள் தற்காப்போடு தடுத்து அதைக் கைகளாலேயே வாங்கிக் கொண்டாள். மறுபடி. அவள் மைக்கைப் பற்றி, என் அருமைச் சதையின் சதையான... என்று தொண்டையின் சக்தியை எல்லாம் திரட்டிக்கொண்டு ஆரம்பித்தபோது, மாலைக்குப் பதிலாக அண்ணியாருக்கு இந்த இரண்டு ரூபாயை அளிக்கிறேன்," என்று ஒரு கிழவர் ஊடே புகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/48&oldid=1256667" இலிருந்து மீள்விக்கப்பட்டது