பக்கம்:அநுக்கிரகா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

55

அவள் பேசியதும் பெருவாரியாகக் கூட்டம் கூடியதும் கூடக் கனிவண்ணனுக்கு வித்தியாசமாகவோ தப்பாகவோ படவில்லை. தன் பேட்டையின் மூலஸ்தானமும் தனக்கு மிகவும் வேண்டிய ஊழியர்களும், தொண்டர்களும் இருக்குமிடமான படுகொலைக்குப்பத்தையே தேடிவந்து தேரடி மைதானத்தில் கூட்டம் போட்டுப் பேசுவது தன்னையே வம்புக்கு இழுப்பது போல் அவனுக்குத் தோன்றியது. பொன்னுரங்கம் திட்டமிட்டுத் தனது சட்ட மன்றத் தொகுதியில் ஒவ்வோர் இடமாக அநுக்கிரகாவின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறான் என்றும் அடுத்து வரும் தேர்தலில் தன் இடத்துக்கு அநுக்கிரகாவே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிற்கக் கூடும் என்றும் பராபரியாகக் கனிவண்ணன் காதுக்குத் தகவல்கள் எட்ட ஆரம்பித்திருந்தன. அவன் உஷாரானான். கூட்டம் நடக்க விடாமல் செய்ய முயன்றான். முடியவில்லை. அமோகமாகக் கூட்டம் நடந்து முடிந்தது. அத்தனை ஏற்பாடுகள்.

ம.மு.க. செயல் வீரர்களாலும் தனக்கு மிகவும் வேண்டியவர்களாலும் நடத்தப்படும் 'மறவன் குரல்' என்னும் வார ஏட்டில் ஓர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதச் செய்தான்.

'தூங்கும் புலியை இடறாதே. தொல்லைகளை விலைக்கு வாங்காதே' என்பது தலைப்பு. 'புண்ணுக்குப் புனுகு பூசும் பொன்னுரங்கங்களின் பாச்சா பலிக்காது', என்று ஆரம்பித்து, முத்தையாவின் மலையாள இரண்டாந்தாரத்துக்குப் பிறந்த மூன்றாந்தரமான பெண் அநுக்கிரகா என்றும் அரசியலில் அவளது நான்காந்தரமான முயற்சிகள் ம.மு.க.வின் பேரைக் கெடுத்து விடும். என்றும் கட்டுரை எச்சரித்தது, பேரோ வடமொழி. பேசுவதோ ஆங்கிலம், தமிழர் இயக்கத்திலே இங்கென்ன வேலை அந்தச் சிங்காரப் பைங்கிளிக்கு?' என்றெல்லாம் காணப்பட்டன. கிண்டல் வாசகங்கள் கட்டுரையில் காணப்பட்டன. அவரைப் பற்றி வருகிற இடங்களில் மிட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/57&oldid=1256772" இலிருந்து மீள்விக்கப்பட்டது