பக்கம்:அநுக்கிரகா.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அநுக்கிரகா

முடியுது. பன்னிரண்டு மணி நேரப் பட்டினியையே அவங்க உண்ணாவிரதம்னு சொல்லிக்கிறதில்லே. நீங்க என்னடான்னா வெறும் பத்து மணி நேரப் பட்டினியை உண்ணாவிரதம்னு போஸ்டர் போடப் போறீங்க."

"ஆமாம். போடப் போறோம். அதுக்கு என்ன? அது தான் அரசியல்."

"ஜமாய்ச்சுத் தள்ளுங்க...அறிவுச் செல்வி அநுக்கிரகா தலைமையில் வன்முறையைக் கண்டித்து உண்ணாவிரதம். போஸ்டர் போட்டுடு, இன்னா செலவாகும்? சொல்லு."

"போஸ்டர் மட்டும் இல்லே சார்! வேற சிலதும் செல விருக்கு."

"என்னன்னு தான் சொல்வேன்."

"கனிவண்ணன் ஆளுங்க, கல் எறிவாங்க....சாணி அடிப்பாங்க... மாடு பன்னிங்களை அவுத்து விட்டுக் கலாட்டா பண்ணுவாங்க!"

"அமைதியா உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கிறவங்களையா அப்படி எல்லாம் கஷ்டப்படுத்துவாங்க?"

"எதிரி கோஷ்டியாச்சே, அதனாலே கலாட்டா பண்ணி 'உண்ணாவிரதம் இருந்தவர்கள் கல்லெறிக்குப் பயந்து ஓட்டமெடுத்தனா'னு நியூஸ் வாற மாதிரிப் பண்ணிடுவாங்க சார்."

"சரி. அதை எப்படிச் சமாளிக்கப் போறே நீ"

"அதைத்தானே இப்போ சொல்லிக்கிட்டிருக்கேன், நாம நம் தரப்பிலே உண்ணாவிரதத்துக்கு உட்கார்த்தரவங்களையே பக்கா ரௌடிங்களாய் பார்த்து உட்கார விட்டோமானால் கவலையே இல்லை."

"என்னப்பா இது? வன்முறையை எதிர்த்து உண்ணா விரதம்ங்கிறே? அதுக்கு வன்முறை ஆட்களை உட்கார வைக்கணும்னும் சொல்றே. ஓரே குழப்பமா இருக்கே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/64&oldid=1257424" இலிருந்து மீள்விக்கப்பட்டது