பக்கம்:அநுக்கிரகா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

73

நடை எப்படியோ ஒரு தொற்றுநோயாக இவர்களிடையே பரவியிருந்தது. அதுக்கிரகா இதைச் சகித்துக் கொண்டாளே ஒழிய ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளூர நகைத்தப்படி மேலுக்குச் சில சமயங்களில் தானும் அதேபோல் பேசி, நடித்தாள். பலரும் பலவிதமாக எழுதவும், பேசவும் உரிமை பெறுவது ஜனநாயகம். எல்லோரும் ஒரே விதமாகப் பேசவும் எழுதவும் நிர்ப்பந்திக்கப் படுவதுதான் சர்வாதிகாரம் என்றால் அத்தகைய சர்வாதிகாரம் ம.மு.க.வில் இருந்தது. 'சதையின் சதையான தமிழ்ப் பெருங்குடி மக்களே!' என்று அவள் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று பொன்னுரங்கம் வற்புறுத்தினான். கல்யாண வீட்டு வாழ்த்துரைகளில் கூடச் சதை, இரத்தம், எல்லாமே தாராளமாகப் புழங்கின. கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

கவிஞர் இளஞ்சோழன் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. கணிவண்ணன் திருமணத்திற்கு வராததைக் கண்டித்தும் அடுத்த எம்.எல்.ஏ. வாக அதுக்கிரகாதான் வரவேண்டும் என்பதை ஆதரித்தும் பேசியதால் அடுத்த நாளே இந்தச் செய்தி கணிவண்ணனின் வகையறாவுக்கு எட்டியது. அவர்கள் உடனே மறவன் குரலில் இளஞ்சேர்ழனையும், அநுக்கிரகாவையும் ஒரே சமயத்தில் மட்டந்தட்டுகிற மாதிரி ஒரு கட்டுரை வெளியிட்டு விட்ட்ார்கள். அநுக்கிரகா திருமணமாகாத அழகிய இளம்பெண். இளஞ் சோழன் திருமணமான இளம் கவிஞன். இவர்களுக்குள் காதல் அரும்புகிறது என்பதுபோல் ஒரு கிசுகிசு வெளியிட்டுச் சேற்றை வாரி இறைத்தது மறவன் குரல். கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இளஞ்சோழன் மீது அவதூறு சொல்லி இளஞ்சோழனைப் பார்த் தாலே அதுக்கிரகாவுக்கு வெறுப்பு வரும்படி பண்ணி, இனிமேல் தான் அநுக்கிரகாவைப் புகழ்ந்து பேசினால் அதற்கு விபரீத அர்த்தம் கற்பிப்பார்கள் என்று இளஞ்சோழனையும் நடுங்க வைப்பதுதான் இந்தக் கிசுகிசுவின் நோக்கமாக இருந்தது. அது ஓரளவு பலிக்கவும் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/75&oldid=1257572" இலிருந்து மீள்விக்கப்பட்டது