பக்கம்:அநுக்கிரகா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

79

" நான் உன்னை இவ்வளவு பணம் செலவழிச்சு அரசியல்லே ஈடுபடச் சொன்னது எதுக்குன்னு தெரியுமில்லே ?"

"தெரியும். ஆனா இத்தனை தூரம் முன்னேறினப்புறம் தோத்துப்போயிடறது முடியாத காரியம், தேர்தல்லே ஜெயிக்க நியாயம் மட்டும் போதாது, சாமர்த்தியம் வேணும்."

"பணக்காரன் சொல்கிறான்கிறதாலே ஒரு பக்கம் நியாயம் அநியாயமாய் திரிந்து தோன்றக்கூடாது. ஏழை சொல்கிறான்கிறதாலே அநியாயம் நியாயமாத் திரிந்தும் நியாயம் அநியாயமாய்த் திரிந்தும் தோன்றக்கூடாது.

"உங்க கான்ஸெப்ட், ஃபிலாஸஃபி எல்லாம் பிரமாதம் தான் அப்பா! இருந்தாலும் எலெக்ஷன் முடிகிறவரை இதெல்லாம் நாம பேச வேண்டாம்; அப்புறம் பார்த்துக்க லாம். '.

பணக்காரன்னா அயோக்கியனாகவும்தான் இருக் கணும்! ஏழைன்னா அவன் யோக்கியனாகவும் ஹீரோவாக வும் தான் இருக்கணும்கிற கொச்சையான குழந்தைத் தனமான தமிழ் சினிமா 'கான்ஸெப்ட்'டைத்தான் நீயும் நம்பறியா ?"

"நான் நம்பறேனோ இல்லியோ, இப்போ , அந்தச் சர்ச்சை எல்லாம் வேண்டாம், எலெக்ஷன் முடியட்டும்.

நல்லவனா இருக்கிற பணக்காரங்களும், கெட்டவனா இருக்கிற ஏழையும்கூட உண்டுங்கிறதை ஒப்புக்கொள்ள... நமக்குத் தெம்பு இல்லை. அதனாலே அப்படிக் கதை எழுத, , படம் எடுக்க, நாடகம் போட, பேசப் பயப்புடறோம். .

"தேர்தல் முடிஞ்சப்புறம் இதைப் பற்றி விரிவா விமர்சிக்கலாம்! என்று அநுக்கிரகா தகப்பனாரிடம் விடைபெற்றுக் கொண்டாள், முத்தையாவுக்கு மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/81&oldid=1259156" இலிருந்து மீள்விக்கப்பட்டது