பக்கம்:அநுக்கிரகா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13

வேண்டுமென்றே ஜனங்களை 'மிஸ்லீட்' பண்ணுகிற விதத்தில் எந்தத் தேதியில் - எந்த ஆண்டில் எதற்காகச் சொல்லியது என்ற பின்னணி எதுவும் புரியவிடாமல் மொட்டையாக முத்தையாவின் மேல்நாட்டுத் தோற்றத்தோடு 'குடிசைகளை அகற்றுங்கள்' என்று மட்டுமே அச்சிட்ட பிரசுரத்தை மறுத்து வேறு முழு விவரப் பிரசுரம் அச்சிட்டு வழங்க அவகாசமே இல்லாமல் அது வெளியிடப் பட்டிருந்தது. அதை மறுத்து விட விரும்பினார் முத்தையா.

அது கனிவண்ணனின் வேலை தான் என்று எல்லோருக்கும் புரிந்தது, ஆனால் யார் பிரசுரித்தது, எங்கே அச்சிட்டுப் பிரசுரித்தது என்ற விவரமெல்லாம் அதில் இல்லை. அச்சகங்களுக்கு விடுமுறையான ஒரு நாளில் அவசர அவசரமாகத் தயார் செய்து வெளியிடப் பட்டிருந் தது இது.

பார்த்தார் முத்தையா. மூடியிருந்த ஓர் அச்சகத்தை அதிகப் பணமும் ஓவர்டைம் கூலியும் கொடுத்துத் திறந்து வேலை செய்ய வைத்து, இரவோடிரவாகப் பதில் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு எல்லா மூலைகளிலும் பரப்பிவிட்டார். அநுக்கிரகாவின் அப்பா அன்று இதையும்தான் சொன்னார், இன்று அநுக்கிரகாவும் இதையே சொல்கிறார்' என்று போட்டுக் குடிசைகளுக்குப் பதிலாக மலிவு விலையில் வீடு கட்ட உலகவங்கி உதவி பெற்றுத் திட்டம் தீட்ட வேண்டும். . என்பதையும் இணைத்து முழு விவரம் வெளியிட்டு மக்களின் சந்தேகத்தையும் போக்கினார். 'அப்படி ஒரு திட்டம் தீட்டிய அநுக்கிரகாவைச் சட்டமன்ற உறுப்பினராக்குங்கள்?' என்ற வேண்டுகோளுடன் துண்டுப் பிரசுரத்தைப் போல் பத்து மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இந்த மறுப்புப் பிரசுரம் வெளியாகிப் பரவிய காரணத்தால் மூலை முடுக்கெல்லாம் உண்மைத் தகவலைத் தெரிவிக்க முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/89&oldid=1259169" இலிருந்து மீள்விக்கப்பட்டது