பக்கம்:அநுக்கிரகா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89

"அதெல்லாம் யாரும் 'ராங்' பண்ண மாட்டாங்க சார்! அஞ்சு ஓட்டுக்கு உறுதி. சொல்லி, சத்தியம் பண்ணிக் கொடுக்கிறவங்க கையிலே தான் ஒரு புடவையே போகும்."

"சத்தியமா? இதுக்கா?"

ஆமாங்க! வழக்கத்திலே உள்ள விஷயந்தாங்க, யாரும் மாட்டேங்கறதில்லே."

அப்போ இப்ப ஒரு சத்தியத்துக்கு விலை அம்பது ரூபாய் பெறுமானம் உள்ள ஒரு புடைவைன்னு சொல்லு.

"சில இடங்களிலே புடவை. வேற சில இடங்களிலே எவர்சில்வர் பாத்திரம்.

“நம்ம ஜன நாயகத்தோட விலை புடவையும், எவர் சில்வர் பாத்திரமுமுன்னு சொல்லு.

"கிண்டல் பண்ணாதீங்க."

"சரி, பண்ணலே, புடவைக்கு. ஃபோன் போடு. பேசி முடிச்சிடலாம், பொன்னுரங்கம் கைத்தறி ஸ்டாக்கிஸ்டுக்குப் போன் பண்ணி முத்தையாவிடம் கொடுத்தான், ஆவாரம் பட்டு ஹவுஸ் வி. டி. முத்தையா என்றவுடனே பயபக்தியோடு, 'சரிங்க! உடனே அனுப்பறேன்,' என்று இசைந்தார் ஸ்டாக்கிஸ்டு.

பொன்னுரங்கமும் அவரும் பேசியபடி தோட்டத்தில் உலாவினர். ஓட்டுப் போட்டிட்டு வாற ஜனங்களுக்கு வடை பாயாசத்தோடு சாப்பாடு போடணும்.

"சாப்பிட வாறவங்க நமக்குத்தான் ஓட்டுப் போட்டிட்டு வர்றாங்கன்னு எப்படித் தெரியும்?"

"எலெக்ஷன் போலிங் பூத்திலேர்ந்து நூறு கெஜம் தள்ளி உட்கார்ந்திருக்கிற நம்ம ஆளுங்க வாக்காளர் பூத்துக்குப் போறப்போ சொல்ற வார்த்தையை நம்பி ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்புவாங்க. அந்தச் சீட்டோட யாரு. வர்றாங்களோ அவங்களுக்குச் சாப்பாடு போட்டுடலாம், தேடி வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/91&oldid=1259177" இலிருந்து மீள்விக்கப்பட்டது