பக்கம்:அநுக்கிரகா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா, பார்த்தசாரதி

91

ரொம்பப் பெரிசு. 'இதோட சென்ட்ரல் ஹால்லே என்னோட கிராண்ஃபாதர் வைஸ்ராய், கவர்னர்னு எத்த னையோ பெரிய பெரிய துரைமார்களுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்திருக்கார். இந்தியாவின் பெரிய பெரிய சமஸ்தானாதிபதிகள்ளாம் இந்த வீட்டு டைனிங் ஹால்லே உட் கார்ந்து சாப்பிட்டிருக்காங்க. வாஷ் பேஸின்களிலேர்ந்து, பாத்ரூம் 'டப்' வரை லண்டனிலிருந்து வந்த சாமான்கள், இதிலே இருக்கிற 'சாண்டலியர்ஸ்' மட்டும் இன்னிக்கு வெறும் ஆண்டிக் விலை மட்டும் போட்டால் கூடப் பதினைந்து லட்ச ரூபாய் பெறும்.

"எல்லாம் சரி மிஸ்டர் முத்தையா, சென்டிமெண்ட் ஸுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. அதையும் மீறி அதுக்காகச் செலவழிக்கிறதிலே அர்த்தம் இல்லே. தவிர இன்னிக்கு முதலீடு இல்லாமல் வெறும் கையோட பாலிடிக்ஸ்லே இறங்கற ஒருத்தனுக்குத்தான் அது கோடி கோடியாத் திருப்பித் தரும், உங்களுக்கும் எனக்கும் அது ஒரு ஒயிட் எலிஃபெண்ட்தானே ஒழிய, வரவு இல்லை. நம்ம கௌரவம், பண்பாடு எல்லாம் அதிலே போய்க் கை நீட்டி வாங்கிச் சம்பாதிக்க நம்மை அனுமதிக்காது. நம்மாலே வாங்கவும் முடியாது. கொடுத்தே பழக்கப்பட்டவங்க வாங்க ஆரம்பிக்கிறது கஷ்டம். வாங்கியே பழக்கப்பட்டவங்க கொடுக்கிறதும் கஷ்டம், ஆம். ஐ ரைட் மிஸ்டர் முத்தையா?"

முத்தையா யோசனையில் ஆழ்ந்தார். பின்பு சிறிது நேரத்துக்கு அப்புறம் மறுபடி சொன்னார். "என் டாட்டர் எம், எல். ஏ.. யா. ஜெயிச்சா உடனே மந்திரியா வரச் சான்ஸ் இருக்கு. அதுக்கு அப்புறமாவது என் பிரச்சினைகள் தீரும்னு நினைக்கிறேன்.

"யார் கண்டார்கள்? உங்கள் பிரச்சினைகள் தீருவதற்குப் பதில் மோசமாகலாம். அதிகமாகவும் செய்யலாம்.

"ஏன்? எதனாலே அப்படிச் சொல்றீங்க?, எனக்கு விளங்கலையே? "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/93&oldid=1259182" இலிருந்து மீள்விக்கப்பட்டது