பக்கம்:அநுக்கிரகா.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

93

வாசலில் கார்வரை போய் வழியனுப்பிவிட்டு வந்தார் முத்தையா.

அவர் மனம் சஞ்சலமாய் இருந்தது. 'பாலிடிக்ஸ் நம்ம மாதிரி ஆளுங்களுக்கு வயபிலிட்டி அல்லது நஷ்டக் கணக்குத்தான்' என்று நண்பர் சொல்லிவிட்டுப் போன வாக்கியத்தைச் சுற்றியே செக்கு மாடு மாதிரி மனம் சுழன்றது, மகள் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார். அநுக்கிரகா வெற்றி பெற்று மந்திரியானால் வந்து கல்யாண உற்சவம் நடத்துவதாக, ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து கொண்டு மனத்தில் தியானித்தார். நண்பர் ஏன் அன்றைக்குப் பார்த்துத் தேடி வந்து துக்கிரி மாதிரி அப்படிச் சொல்லிவிட்டுப் போனார் என்று எண்ணி எண்ணித் தவித்தது அவர் உள்ளம். அந்த நண்பர் வந்த போது அநுக்கிரகா வீட்டில் இல்லை. அவர் வந்து பேசி விட்டுப் போனதெல்லாம் பற்றி மகளிடம் அவர் எதுவும் கூற விரும்பவில்லை .


14

பரபரப்பான தேர்தல் நாள் விடிந்து, நிமிஷ்மாய் நிகழ்ந்து ஓடிவிட்டது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது. அநுக்கிரகாவையும், கனிவண்ணனையும் தவிர மற்ற இரண்டு வேட்பாளர்களும் —- ஒரு போலிங் பூத்துக்கும் ஏஜெண்ட் கூட நியமிக்கவில்லை.

மாலைப் பத்திரிகைகளில், அந்தத் தொகுதியில் பெண் . வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் படித்தபோது, முத்தையாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பொன்னுரங்கமும், "நம்ம வெற்றி நிச்சயமுங்க," என்றான்.

போர் முடிந்து, ஓய்ந்த களம் போல, தெருக்களும், தெருச் சுவர்களும் வெறிச்சேடிக் கிடக்க ஆரம்பித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/95&oldid=1259186" இலிருந்து மீள்விக்கப்பட்டது