பக்கம்:அந்தமான் கைதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99



னொரு பெண் வந்து இருக்க நான் விடுவேனா? ஊம். அவ்வளவு தைரியமா உனக்கு? டேய்...

(பெரிய சப்தத்துடன் பேய் போல் ஆடுகிறாள்).

பொன் : (நடுக்கத்துடன்) ஐயய்யோ!...... பேயா பிடித்திருக்கிறது!

லீலா : டேய்...... நீ இந்தப் பெண்ணைத் தொட்டால் உன்னை மாறு கால் மாறு கை வாங்கிவிடுவேன் தெரியுமா?

பொன் : (நடுங்கிக்கொண்டே) இல்லை, இல்லை, இல்லை சத்தியமாகத் தொடவே மாட்டேன். தாயே! நீதான் காப்பாற்றவேண்டும்.

(சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுகிறார்.)

லீலா : சரி, போ வெளியே, உம் சீக்கிரம் போ.

பொன் : போகிறேன், போகிறேன். போகிறேன்!(எழுந்து ஓடி ஒரு ஒரமாய் நின்று) தாயே! நான் போகிறேன்; நீ யாரென்று சொன்னால்......

லீலா : நானா? என்னையா கேட்கிறாய்? உம்... டேய்... என்னைத் தெரியவில்லையா உனக்கு?...உம் நான் தான் பூவோடும் மஞ்சளோடும் இந்த வீட்டிலேயே தெய்வமாயிருந்து இது வரையிலும் உன்னைக் காப்பாத்திக் கொண்டு வரும் பூவாடைக்காரி மங்களம். நீ வெளியிலே செய்யும் அக்கிரமங்களெல்லாம் போதாதென்று வீட்டிலுமா ஆரம்பித்து விட்டாய்! அது நான் இருக்கும் வரை முடியாது. என் உடம்பெல்லாம் எரிகிறது. உம். போ. போ. வெளியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/100&oldid=1073455" இலிருந்து மீள்விக்கப்பட்டது