பக்கம்:அந்தமான் கைதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

டேய்....... (பிரம்பை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு பூசாரி முதல் பொன்னம்பலம் வரை எல்லோரையும் பலமாக விரட்டி அடிக்கிறாள். பூசாரி. உயிர் பிழைத்தால் போதுமென்று ஒடுகிறான்.. மற்றவர்களும் ஓடுகிறார்கள்.)


காட்சி 27.


இடம் : இரங்கூனில் நடராஜன் இருப்பிடம்.

காலம் : காலை

[நடராஜன் பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தபால்காரன் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுக்க நடராஜன் ஒரு கவரை உடைத்துப் படிக்கிறான்.]
ஷண்முகனாதபுரம்

அன்பார்ந்த அண்ணா!

தாங்கள் அம்மாளுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தேன். தாங்கள் செய்திருந்த எச்சரிக்கை யெல்லாம் இறந்துபோன பிணத்திற்குச் செய்த இன்செக்ஷன் போல் பயனற்றுப் போய்விட்டது. உங்களைக் குறை கூறுவதாக எண்ணவேண்டாம். விதியென்று சொல்லுகிறார்களே. அதுதான் போலும் என்னைத் தினமும் கொன்று வருகிறது. தாங்கள் என்று என்னைத் தனியே விட்டுச் சென்றீர்களோ அன்றே என் எதிர்கால மனக்கோட்டைகள் யாவும் இடிந்து விழ, ஆரம்பித்துவிட்டன.

அருமை அண்ணா! ஏதோ நான் பிதற்றுவதாக எண்ணவேண்டாம். தங்களையும் என்னையும் பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/105&oldid=1073459" இலிருந்து மீள்விக்கப்பட்டது