பக்கம்:அந்தமான் கைதி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

ஜீவன் உண்டே! என்ன யோசிக்கிறீர்கள்? நம் தாய் தான். அவர்களின் அரும் பெரும் முயற்சியால் இன்று நான் மாமா என்று சொல்லக்கூடிய அந்த மிருக மனிதன் திவான்பகதூருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கப்பட்டிருக்கிறேன். தாங்கள் சென்ற மறு வாரமே எனக்குத் திருமணம் என்னும் கொடு மணம் நடத்தப்பட்டுவிட்டது. அந்த அக்ரமத்தைச் சொல்லி அழவும் ஆறுதல் கூறவும் இந்த அதே உலகில் ஒருவருமில்லை. இருந்த தாங்களும் என்னிடமிருக்கக் கொடுத்து வைக்கவில்லை. அதுவும் என் காலம்தான். இக் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை, இனிமேலாவது இப் பரந்த உலகில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடவாதிருக்கும் பொருட்டு உருகியோடும் என் சரீரத்தை மண்ணில் மறைக்கத் தீர்மானித்துவிட்டேன். இருந்தாலும் என் கோழை மனம் இறப்பதற்கு முன் தங்களின் திவ்ய முகதெரிசனத்தைக் காணத் துடித்துக்கொண்டிருக்கிறது, இதுதான் என் கடைசி ஆசை.
இப்படிக்குத் தங்கள் தங்கை,
அபாக்கியவதி, லீலா,

நட : லீலா, லீலா! உனக்கா இக்கதி நேரிடவேண்டும்? இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லையே! என்ன அக்ரமம் பாபி நான்தான் இதற்குக் காரணம். உன்னை அந்தச் சண்டாளர்களிடையே விட்டு வந்தது என் தப்பிதம்தான்........ அடே அயோக்கியக் கிழட்டுப் பயலே! உன் எண்ணம் நிறைவேறிவிட்டதென்றா நினைத்துக்கொண்டிருக்கிறாய்? ஊம்...... எங்களைப் பெற்ற தாயே பேயாகவா இருக்கவேண்டும்! இருக்கட்டும். லீலா இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/106&oldid=1072301" இலிருந்து மீள்விக்கப்பட்டது