பக்கம்:அந்தமான் கைதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்சி 30.


இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம்: மாலை.

பாத்திரங்கள்: லீலா, திவான்பகதூர், நடராஜன்.
[லீலா, பாலுவின் படம் ஒன்றைக் கையில் வைத்துத் தனக்குள் அழுதுகொண்டிருக்கிறாள்.]

லீலா: என் அன்பே! என் மனமார உங்களைத்தானே நம்பி இருந்தேன். கனவிலும் நான் தங்களை மறந்ததில்லையே! என்மேல் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நான் இரண்டு மூன்று முறை கூப்பிட்டனுப்பியும் என்னைப் பார்க்காமலும், எழுதி யனுப்பிய கடிதங்களுக்கும் பதில் அனுப்பாமலும், இருப்பதை நினைத்தால் நீங்கள் என்னை உண்மையில் கைவிட்டு விட்டீர்களா? அல்லது என்னையே தவறாக நினைத்து விட்டீர்களா? எனக்கொன்றும் புரியவில்லையே! (பொன்னம்பலம் பிரவேசித்து மறைவாக நின்று கவனிக்கிறார்) அன்பரே! நான் வேறொருவனுக்கு மனேவியாக்கப் பட்டிருப்பது என் குற்றமா? ஐயோ! இந்தப்பாவி இந்தக் கிழவனிடத்திலிருந்து என் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தினமும் மானத்தை விட்டுப் பேயாடுவதைத் தாங்கள் எப்படி அறியமுடியும்? ஐயோ என் உண்மை நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்களா? அறிந்தால், என்னை இத்துன்பத்திலிருந்து காப்பாற்றாமல் இருப்பீர்களா? நாதா! எனக்கு ஒன்றும் புரிய வில்லையே! ஒருக்கால் வேறொருவனுக்கு மனைவியாக்கப்பட்டவளை நாம் விரும்பினால் ஊர் உலகம் நகைக்குமே என்று பயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/113&oldid=1072541" இலிருந்து மீள்விக்கப்பட்டது