பக்கம்:அந்தமான் கைதி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

 லீலா: நான் எப்படி இருந்தால் உனக்கென்ன? நீயேன் நான் தனியாக இருக்கும் இடத்திற்கு வந்தாய்?

ஜம்பு : நெடுநாளாகவே உன்னைத் தனித்துக் கண்டு பேச வேண்டுமென்பது ஆசை. அதற்கு இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

லீலா: எனக்குப் பேசச் சந்தர்ப்பமில்லை, நீ போகலாம்.

ஜம்பு : ஏன் என்னைக் கண்டால் பிடிக்கவில்லையா? ஆமாம், பாலசுந்தரத்தைக் கண்டால் பிடிக்கும்.

லீலா: ஜம்பு நாம் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலிருந்தே உன்னை எனக்கு நன்றாத் தெரியும். தயவு செய்து நீ போய்விடு. இங்கு நாம் தனித்திருப்பது தகாது.

ஜம்பு : லீலா அன்றுதான் பாலசுந்தரத்தை நம்பி இருந்தாய். இப்போது அவனும் கைவிட்டு விட்டான்! இப்பொழுதாவது என்னை உனது ஆசை நாயகனாக..

லீலா : ஜம்பு,நீ மரியாதையாகப் போகமாட்டாயா என்ன? உலகில் நான் யாரையுமே விரும்பவில்லை.

ஜம்பு : என்ன! பாலுவைக்கூடவா?

லீலா : ஆமாம்.

ஜம்பு : ஒகோ அதனால்தான் இங்கு வந்த பிறகு கூட இரண்டு முறை தபால் எழுதிக்கொடுத்து ஆள் அனுப்பினாயோ?

லீலா : யார் நானா?

ஜம்பு: நீதான், லீலா! எனக்கு எல்லாம் தெரியும். பள்ளியில் படித்த காலத்திலும் அதன் பிறகு நீ பள்ளியை நிறுத்திய பிறகும், தினமும் நீயும் அவனும் உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/118&oldid=1072750" இலிருந்து மீள்விக்கப்பட்டது