பக்கம்:அந்தமான் கைதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

வீட்டுத் தோட்டத்தில் சந்திப்பதிலிருந்து நேற்று லெட்டர் எழுதிக் கொடுத்தனுப்பியது வரை எல்லாம் எனக்குத் தெரியும். நீ என்னை ஏமாற்ற முடியாது.

லீலா : ஆமாம் உண்மைதான், அது என் இஷ்டம். அதைக் குறித்துக் கேட்க நீ யார்?

ஜம்பு : எனக்குக் கேட்க உரிமை யில்லாமலா நான் கேட்றேன்? நீ இனி பாலுவை நம்பிப் பயனில்லை. அவன் உன்னை விரும்பவே மாட்டான். அவன் என்ன என்னைவிட உயர்ந்தவன். நீ அவனிடத்தில் விரும்பும் இன்பத்தை என்னிடம் விரும்பினால் கிடைக்காதா என்ன?

லீலா : சீச்சி மடையா! என்ன சொன்னாய்?

ஜம்பு : லீலா! பதறாதே. இதற்குமுன் பல தடவைகளில் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன். ஆனால் நீ இன்று திவான்பகதூர் மனைவி. நான் உங்கள் வேலைக்காரன் என்று நினைக்கலாம். ஆனல் அந்த திவான்பகதூர் இந்த ஜம்புவின் கையில் இருக்கிறார் தெரியுமா? பிசாசு ஆடிக் கிழவனை ஏமாற்றுவது போல் என்னை ஏமாற்றி விட முடியாது. என்னை நீ பகைத்துக்கொண்டால் உன் ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன். லீலா, லீலா என் மனதை நீ யறியவில்லை. நான் எத்தனை வருஷங்களாக உன்னைக் கெஞ்சுகிறேன். எவ்வளவு பாடுபடுகிறேனென்பது உனக்குத் தெரியுமா? என் எண்ணத்தைக் கடைசியாக இப்படியாவது நிறைவேற்றலாமென்று தானே இங்கு திவான் பகதூர் வீட்டில் வேலைக்கு அமர்ந்து இந்தக் கல்யாணத்தையும் முடித்து வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/119&oldid=1072775" இலிருந்து மீள்விக்கப்பட்டது