பக்கம்:அந்தமான் கைதி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

 லீலா : (ஆச்சரியத்துடன்) என்ன! கல்யாணத்தை நீ முடித்துவைத்தாயா?

ஜம்பு : ஆம், லீலா! உன் மீதுள்ள காதலால் உன்னை எப்படியாவது பாலுவிடமிருந்து பிரிக்கவேண்டு மென்று நினைத்தேன். அதற்காகவே திவான்பகதுரரிடம் வேலைக்கமர்ந்தேன். அவர் குணம் எனக்குத் தெரியுமாகையால் அவரை நாலாந்தாரமாக கல்யாணம் செய்துகொள்ளும்படி தூண்டி, உன்னைப் பற்றியும் உனது அழகைப் பற்றியும் அடிக்கடி அவரிடம் தூபம்போட்டு, உன் போட்டோவையும் காட்டி அவரை உன் அழகில் மயங்கும்படி செய்தேன். நான் ஆட்டிவைத்தேன், அவர் ஆடினார். பழைய குடும்ப வருத்தங்களைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் பெண் கேட்க வந்தார். எப்படியும் உங்கள் அண்ணன் இருந்தால் காரியம் முடியாதென நினைத்த நான், தகுந்த சூழ்ச்சி செய்து உன் அண்ணனையும் ரங்கோனுக்குக் கடத்தினேன். உங்கள் கல்யாணத்தை முடித்துவைத்தேன். ஏன், திவான்பகதூருக்காகவா? இல்லை. எப்படியாவது உன்னை பாலுவிடமிருந்து பிரித்துவிட்டால், பிறகு.. நீ வயது சென்ற திவான்பகதூரை வெறுத்து என் இஷ்டத்திற்கு இணங்குவாயென்றுதான். லீலா! லீலா! நான் செய்ததெல்லாம் அக்ரமம்தான். ஏன் அப்படிச் செய்தேன்? உன் மீதுள்ள, ஒப்பற்ற காதலால்தான். இப்பொழுது நீ சரியென்று ஒரு வார்த்தை சென்னால் போதும். நமது வர்ழ்க்கை இந்திர போகமாய்த் திகழும். இத்திரண்ட செல்வம் எல்லாம் உன்னையே சேரும்; நாம் இருவரும் மதனும் ரதியும்போல் இன்பமாய் வாழலாம். கிழவனைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/120&oldid=1072776" இலிருந்து மீள்விக்கப்பட்டது