பக்கம்:அந்தமான் கைதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

வேண்டாம். அவனை ஒரே நிமிஷத்தில் முடிப்பதற்கு எனக்கு வழி தெரியும். எங்கே! எங்கே ஒரு வார்த்தை சொல்லு, ஒரு வார்த்தை சரி என்று சொல்லு. (லீலாவை நெருங்குகிறான்.)

லீலா : சீச்சீ மிருகமே! உனக்கு வெட்கமில்லை. தூ! உன் நெஞ்சு என்ன கல்லா அல்லது இரும்பா? நான் படித்த, கேள்விப்பட்ட கதைகளில் கூட உன்னைப்போல் ஒரு அசுரன் இருந்ததில்லையே! மனிதர்களிலும் இவ்வளவு கொடிய கடின சித்தம் உடையவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைத்ததில்லையே. ஐயோ, அடப்பாவி! உன் வாழ்க்கையைக் கெடுத்ததெல்லாம் நானே என்று இவ்வளவும் என் முன்னாலேயே கூற உனக்கு என்ன துணிவு? அடே சண்டாளா! இதுதான் நீ என்மேல்கொண்ட உண்மைக் காதல்! இதுதான் ஒப்பற்ற காதல், காமவெறி என்று சொல். நீ என்னை விரும்பினாய். ஆனால் நான் உன்னை விரும்பவில்லையே! தானாகக் கனியாத காயைத் தடிகொண்டடித்தால் பழுக்குமா? வெம்பி அழுகி அல்லவா போகும். (அழுகிறாள்), ஐயோ, ஜம்பு ஜம்பு உன் காம நோயைத் தீர்க்க வேறு ஒரு வழியும் தோன்றவில்லையா? எனக்காக நீ செய்த அக்ரமங்களை யெல்லாம் நீ தியாகமென்றா நினைக்கிறாய்? உன் மேல்நாட்டு நாகரீக மோகம் உன் பள்ளிப்படிப்பு உன்னை எவ்வளவு கேவல வழிகளில் செலுத்திவிட்டதென்பதை உணராமல் நீ செய்ததை யெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகிறாயே! ஐயோ! என்னைக் கெடுத்து, என் அண்ணனை ஊரை விட்டுப் பிற நாடு கடத்தி, இத்தனையும் போதாதென்று இதுவரை உன்னை நம்பி, உன் சொல்லைக் கேட்டு, உனக்கு ஊதியம் கொடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/121&oldid=1072778" இலிருந்து மீள்விக்கப்பட்டது