பக்கம்:அந்தமான் கைதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

தகைய விசித்திரமான குற்றவாளியை நான் இன்றுதான் பார்க்கிறேன். எதிரி தான் கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு எவ்வித பதிலும் சொல்ல மறுக்கிறார்.

சம்பவம் நடந்த அதே சமயத்தில் அதே இடத்தில் கையில் ரத்தம் தோய்ந்த பிச்சுவாவுடன் எதிரி பிடிபட்டதாகவும் கொலையுண்டவரின் நான்காவது மனைவியாகிய லீலாவுக்கும் பாலசுந்தரத்திற்கும் நட்பு இருந்திருக்க வேண்டுமென்றும் தங்கள் காதலுக்குத் திவான்பகதூர் இடையூறாய் இருப்பதாக நினைத்தே பாலசுந்தரம் கொலை செய்திருக்க வேண்டுமென்றும் சாட்சிகள் நிரூபிப்பதாலும், பெரும்பாலான ஜூரர்களும் பாலசுந்தரம் குற்றவாளி என்றே அபிப்பிராயப் படுவதாலும் சட்டப்படி பாலசுந்தரத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன்.

லீலா : ஹா! (மூர்ச்சையாகிறாள்; அருகிலிருப்பவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள்.)

இன்ஸ்பெக்டர் : டேய் 203, இந்தப் பெண்ணை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்துங்கள். (போலீஸார் லீலாவை அப்புறப்படுத்த நெருங்கும் சமயம் இளைத்த தேகமும், நீண்ட தாடியும், எங்கும் கிழிந்து தொங்கும் உடையும், அருவருப்பான தோற்றமும் உள்ள நடராஜன் வீராவேசத்துடன் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு பிரவேசிக்கிறான்; ஆச்சரியத்துடன் யாவரும் அவனைக் கவனிக்கிறார்கள்.)

நட : நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! பாலசுந்தரம் நிரபராதி! அவன் கொலை செய்யவில்லை.......

(கோர்ட்டில் பரபரப்பு உண்டாகிறது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/136&oldid=1073034" இலிருந்து மீள்விக்கப்பட்டது