பக்கம்:அந்தமான் கைதி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

இன்ஸ்பெக்டர் : யாரடா இவன் பைத்தியக்காரன்? (ஜவானைப் பார்த்து) டேய்! இவனை வெளியில் தள்ளுங்கள்!

(போலீஸ் தள்ள நெருங்க)

நட : (ஜட்ஜியைப் பார்த்து) யுவர் ஹானர். நான் பைத்தியக்காரன் இல்லை. தயவு செய்து எனக்குக் கொஞ்ச நேரம் பேச அனுமதி கொடுத்தால் இவ் வழக்கைப் பற்றிய எல்லா விஷயங்களையும் விபரமாகச் சொல்லுகிறேன்.

நீதிபதி : ஆல்ரைட். 10 நிமிஷத்திற்குள் இவ்வழக்கைப் பற்றி உமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்.

நட : யுவர் ஹானர். கொலை செய்யப்பட்ட திவான்பகதுர் பொன்னம்பலம் பிள்ளை எனது தாய்மாமன். அந்தப் பெண் அவரது நான்காவது மனைவி. இறந்து போனவர் என் தங்கையை நாலாந்தாரமாகக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினர். நீங்களே யோசித்துப் பாருங்கள். படித்து உலகம் தெரிந்த எந்த வாலிபன்தான் தன் தங்கையை அறுபது வயதுக்கு மேற்பட்ட ஒரு கிழவனுக்குக் கொடுக்கச் சம்மதிப்பான்? ஆகவே நான் அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்துவிட்டேன். நான் இருந்தால் அவர் எண்ணம் நிறைவேறாதென்பதை உணர்ந்த பொன்னம்பலம் பிள்ளை, தன் பணத்தையும் செல்வாக்கையும் கொண்டு பல பேரைப் பிடித்து அநேகம் சூழ்ச்சிகளைச் செய்து என்னை ரங்கூனுக்குப் போகும்படி செய்துவிட்டார். நான் சென்ற ஒரு வாரத்திற்குள் என் தாயாரைத் தன் வசப்படுத்தி என் தங்கையின் இஷ்டமில்லாமலே பலவந்தமாகத் தாலிக் கயிற்றைக் கழுத்தில் ஏற்றிவிட்டால், அவள் தன் மனைவிதானே என்ற மூடத்தனமான மனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/137&oldid=1073037" இலிருந்து மீள்விக்கப்பட்டது