பக்கம்:அந்தமான் கைதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

இல்லை. ஒன்றும் பயனில்லை. வேலையில்லாது வீணாகக் கழியும் என் வாழ்நாளை நல்ல வழிகளில் செலவழிக்க எண்ணினேன். சீர்திருத்தக் கழகமொன்று நிறுவி என்னாலான பொது ஜனத் தொண்டுகளைச் செய்து வந்தேன். ஏழைகளை இம்சித்துப் பொருள்சேர்க்கும் என் மாமனுக்கு இதனால் என்மீது ஆத்திரம் அதிகரித்தது. என் பொதுப் பணியும் அதோடு வறுமையும் பெருகிக்கொண்டே வந்தன. ஏழைகள் என்னை வாழ்த்தினர். பணக்காரர்கள் தூற்றினர். எங்கள் சங்கத்தின் மூலம் பல விதவா விவாகங்களும் கலப்பு மணங்களும் நிகழ்ந்தன. வெளியுலகம் தெரியாத என் தாய் என்னைச் சதா தூஷிப்பாள். என் தங்கையின் திருமணத்தைக் குறித்தும், எங்கள் வறுமையைப் பற்றியும், நான் கவலையின்றிச் சுற்றுகிறேனென்பது என் தாயாரின் எண்ணம். ஆம்; அன்று ஒரு முக்கியமான பொதுக்கூட்டம்; அதற்காக நான் வெளியே புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன்.

[கைதி சொல்லும் கதையின் பிற்பகுதி நிகழ்ச்சியாக வருகிறது.]

காட்சி 2.

இடம்: நடராஜன் வீடு.

காலம்: காலை

பாத்திரங்கள் : நடராஜன், லீலா, காமாட்சி

[லீலா புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறாள். நடராஜன் வருகிறான்.]

லீலா : எங்கே அண்ணா இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாய்ப் புறப்பட்டு விட்டீர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/14&oldid=1073438" இலிருந்து மீள்விக்கப்பட்டது