பக்கம்:அந்தமான் கைதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

 (நீண்ட பெருமூச்சு, மேலே பார்த்து) இன்ப அலைகளே இதயத்தில் எழுப்பும் பூரணச் சந்திரன் பொலிவுற்றுத் திகழும் இந்த இரவில்கூட அவர்கள் ஆனந்தமாய்த் தங்கள் மறுமணத்தால் புத்துணர்ச்சி பெற்ற புது வாழ்க்கையை நடத்துவார்கள், (கண்களை மூடிப் புன்முறுவல் தவழ) ஆம், நடத்துவார்கள்; அனுதினமும் என் மனக்கண்ணால் அவர்கள் உல்லாச வாழ்க்கையின் இன்பக் கனவைத்தான் காணுகிறேன். இதோ! இதோ பாருங்கள். இப்பொழுதுகூட அதே இன்பக் காட்சிதான்!

(கண்ணை மூடிக்கொண்டே வெட்ட வெளியைக் காட்டிப் பைத்தியம்போல் அதோ அதோ! என்று தனக்குள் மகிழ்ச்சி அடைகிறான்.)

பெ.கைதி: ச்சு-ச்சு-ச்சி (பெருமூச்சிட்டு) ஐயோ! பாவம், ஒரு பெண்ணால் உன் வாழ்க்கையே கெட்டு விட்டதே!

சி.கைதி: இல்லை, இல்லை! தாத்தா. நான் கெட்டதற்குக் காரணம் அந்தப் பெண்ணா? சற்று யோசனை செய்து பாருங்கள்.

பெ.கைதி: பின்னே என்னப்பா?

சி.கைதி: இப்படிபட்ட அக்ரமங்களுக்கெல்லாம் இடமளிப்பது நம் இந்து சமூகமல்லவா? வேறு எந்த நாட்டில் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன? (சற்று மெளனம், பெருமூச்சு) இருந்தாலும் தாத்தா எனக்கு இப்போது ஆனந்தமாய்த்தான் இருக்கிறது. என் வாழ்க்கையின் லட்சியத்தை நிறைவேற்றி விட்டேன். இன்றைக்கு என் தங்கை தன் காதலனோடு இன்ப வாழ்க்கை நடத்துவாளென்பது திண்ணம். எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/142&oldid=1073100" இலிருந்து மீள்விக்கப்பட்டது