பக்கம்:அந்தமான் கைதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நடராஜன்: உம்; முடிந்ததா ராமாயணம்? இல்லை...... இன்னும் ஏதாவது இருக்கா?

காமா: பொறந்தவள் ஒருத்தி இருக்காளேன்னு வரப் போவ இருந்த அண்ணனையும் இந்தப் பக்கமே வராமேப் பண்ணிட்டே, அவரும் நம்பளெ திரும்பிப் பாத்து வருஷம் ரெண்டுக்கு மேலே ஆச்சு. அவரெப் பகைச்சிக்காமெ இருந்தால் ஏன் நமக்கு இந்தக் கஷ்டமெல்லாம்? இந்த ஊருலே அவரெவிடப் பெரிய மனுஷென் யாரு இருக்கா? அவர் மனசுவச்சா நம்மளும் நாலுபேருக்குப் பெருமையாத்தான் இருக்கலாம். (முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொள்ளுகிறாள்.) ஊம் அதெச் சொல்லி யென்ன பிரயோசனம்? என்னமோ அப்பா போனதெல்லாம் போகட்டும். இந்தா பாரு நடராஜா அவர் யாரு? ஒன் தாயோட பொறந்த மாமன்தானே? "மாமா! நான் இப்படியெல்லாங் கஷ்டப்படறேன். எனக்கு இதைச் செய்......”

நடராஜன்: போதும் போதும். அவன் பெரிய மனிதனாயிருந்தால் அவன் மட்டில் இருக்கட்டும்; இல்லை, அவன் குபேர சம்பத்தில் நீயும்போய் அனுபவி. என்னுடலில் உயிர் உள்ளவரை நான் யாரையும் கெஞ்சத்தயாராயில்லை.

காமா: ஆமாம்...... சொல்லப்போனக் கோவம் மட்டும் வந்துவிடும். ஏன்,நீயாத்தான் ஒரு வேலையைப் பாத்து இருக்கிறதுதானே?

நடராஜன்: பார்க்காமலா இருக்கிறேன்? பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஊர் இருக்கும் நிலை உனக்கெங்கே தெரிகிறது? பி. ஏ., எம். ஏ. படித்தவனெல்லாம் பத்து ரூபாய் சம்பளத்துக்குப் பஞ்சாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/16&oldid=1024335" இலிருந்து மீள்விக்கப்பட்டது