பக்கம்:அந்தமான் கைதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


முனி: கடைந்தெடுத்தமாதிரி. பொடிசு.

பொன் : ஆமா, மிகவும் ஜோராக இருப்பாள். ஒருநாள் என்னமோ தோட்டத்துப் பக்கம் போனபோது, (கணபதி ஐயரைப் பார்த்து, "அட போயேய்யா, போய் எலையெப் போடும். இதோ வருகிறேன். வாயைப் பிளந்துகொண்டு நிற்கிறீரே”. ஐயர் போகிறார்.) அங்கே வேறு ஒருவருமே இல்லை. ரொம்ப ஏழை. சரிதான் ஏதோ கால் அரை கொடுப்போம் கழுதை பிழைத்துப் போகட்டும் என்று நினைத்துக் கூப்பிட்டேன். அவளும் வந்தாள். உம் , வந்தாளா?

முனி: ஹும் வத்திருப்பாள், வந்திருப்பாள்; வந்துதானே ஆகவேனும் சமுகத்திலே விரும்பிக் கூப்பிடும் போது அந்தக் கழுதை எப்படி மறுக்க முடியும்?

பொன்: உம் அப்படிச் சொல்லு! அது தானே நியாயம்?

முனி: ஆமாம்! ஆமாம்! அதுதானே நியாயம், நியாயம். இங்கே இல்லாமல் வேறே எங்கே இருக்க முடியும்?

பொன்: வந்தாளா? வந்தவள், ரொம்ப நாணிகோணிக் கொண்டு கொஞ்ச தூரத்திலேயே நின்றாள்.

முனி: சரிதான் ரொம்பப் புதுசுபோலே இருக்கு.

பொன் : எல்லாம் நாம் தான் சரி பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து மெள்ளக் கையைப் பிடித்தேன். பிடித்தேனா? அவ்வளவுதான் அவள் ஒரே சத்தம் போட ஆரம்பித்துவிட்டாள். இதற்கு நானா பயப்படுகிறவன்?

முனி: அவ பயந்துட்டாளோ?

பொன்: உம், ஆமா ரொம்பப் பயந்துட்டா; இருந்தாலும் நானா விடுறவன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/22&oldid=1024711" இலிருந்து மீள்விக்கப்பட்டது