பக்கம்:அந்தமான் கைதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


ஜம்பு : ஓய்! நம்ம எஜமான் தங்கை மகளாய்யா.

கணபதி : அப்படியா பேஷ் நன்னாயிருக்கு.

பொன் : நமக்குப் பொருத்தமா இருக்குமா?

கணபதி : ஆஹா! இட்டலியும் சாம்பாரும் போலே, பூரியும் மசாலாவும் போலே, பாலும் ஜலமும் போலே, வெகு பொருத்தம்.

ஜம்பு : பார்த்தீர்களா! நீங்கள் அந்தப் பெண்ணை பார்த்தால் விடமாட்டீர்களென்று நான் முன்பே சொல்லவில்லையா, சரி, பிறகென்ன யோசனை? எப்படியாவது நடராஜனே சரிக்கட்டிக் காரியத்தை முடிக்க வேண்டியதுதான்.

பொன் : காரியத்தை முடிக்க வேண்டியதுதான். ஆனால் அந்தப் பயல் விஷயம்.....!

ஜம்பு : நீங்க என்ன எஜமான், இப்படி யோசிக்கிறீர்கள்; அவன் ஏக லாட்ரி என்று சொல்லுகிறேனே!

பொன் : உம்; இன்னைக்கு என்ன கிழமை?

முனி : வெள்ளியோட வெள்ளி அஞ்சு-சனி......

ஜம்பு : அட என்னையா ஒளர்றே. செவ்வாய்க்கிழமை.

முனி : ஆமா ஆமா!

பொன் : சேச்சே! நாள் நல்ல நாளா இல்லையே! ஓய் கணபதி ஐயரே! பஞ்சாங்கம் எடுத்தாய்யா.

கணபதி : பஞ்சாமிர்தமா?

பொன் : இல்லை. பால் பாயாசம்.

கணபதி : இன்னைக்குப் பால் பாயாசம் செய்யலேயே!

பொன் : உம்மத் தலைமண்டை, பஞ்சாங்கத்தை எடுத்தாய் யான்னா....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/26&oldid=1024970" இலிருந்து மீள்விக்கப்பட்டது