பக்கம்:அந்தமான் கைதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


கணபதி : ஓ! பஞ்சாங்கமா (உள்ளே ஓடுகிறான்)

முனி  : பஞ்சாமிர்தம் இருந்தாலும் கொஞ்சம் கொண்டாருமே! சாப்பிடலாம்.

பொன்  : ஆமாம், ஆமாம். சரி நாளைக்குக் காலையில் அவசியம் போக வேண்டியதுதான். ஜம்பு! நீ மகா புத்திசாலியாக இருக்கிறாயே! நீ மட்டும் இந்தப் படத்தைக் காட்டாமல் இருந்திருந்தால் அநியாயமாய் நான் இந்த அழகு ராணியை இழந்திருக்க வேண்டியதுதானே?

ஜம்பு : (தலையைச் சொரிந்த வண்ணம் நெளிந்துகொண்டு) ஆமாம், ஆமாம், இந்தப்படத்தை அந்தப் போட்டோக்கிறாப்பர் சாமான்யமாகவா கொடுத்தான்?

பொன்  : பிறகெப்படி வாங்கி வந்தாய்?

ஜம்பு : பிறகு என்ன? எஜமானிடம் சொல்லி ஏதாவது ‘சம்திங்’ வாங்கித் தருவதாகச் சொல்லித்தான் வாங்கினே. நமக்குக் காரியம் அவசியம் பாருங்கோ!

பொன் : பேஷ்! அதுதான் சரி. இந்த மாதிரிக் காரியங்களிலெல்லாம் பணத்தைப் பொருட்படுத்தலாமா? (சட்டைப் பையிலிருந்து மூன்று பத்து போய் கோட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார்) இந்தா இதை அவனிடம் கொடு. இதை நீ செலவுக்கு வைத்துக் கொள்.

ஜம்பு : பரவாயில்லே! எனக்கெதற்கு இப்பொழுது..... (ஜம்பு மரியாதையோடு வாங்கிக்கொள்கிறான்)

பொன் : பரவாயில்லை. சும்மா செலவுக்கு வைத்துக்கொள். நாளை காலை புறப்பட வேண்டும். பழங்கள் மிட்டாய் வகைகள் எல்லாம் வாங்கி வைக்க ஏற்பாடு செய். ட்ரைவரிடமும் சொல்லித் தயாராய் இருக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/27&oldid=1024980" இலிருந்து மீள்விக்கப்பட்டது