பக்கம்:அந்தமான் கைதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

 லீலா : என்னமோ நாய் முழுத் தேங்காய்க்கு ஆசைப்பட்ட கதையைப் போலத்தான்.

பாலு : ஏன் லீலா! நாம் இருவரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது? அப்பா அம்மா இருவரும் சில நாளாக மெள்ளக் கலியாணப் பிரச்னையை ஆரம்பம் செய்கிறார்கள். எனக்கோ வாய்விட்டு அவர்களிடம் சொல்ல யோசனையாயிருக்கிறது.

லீலா : (நீண்ட பெருமூச்சுடன்) யோசனையின் முடிவு இரண்டில் ஒன்றுதானே?

பாலு : லீலா என்ன சொல்லுகிறாய்?

லீலா : ஒன்றுமில்லை ஒன்று வாழ்வு. இல்லையேல் சாவு இது தானே... என் முடிவு... அதுதான் உங்கள் முடிவில் இருக்கிறது என்றேன். நான் வேறென்ன சொல்வேன்?

பாலு : (பதட்டத்துடன்) இல்லை, இல்லை. லீலா! நீ அப்படி ஒன்றும் தவறாக நினைத்துவிடாதே. அதற்காகத்தானே அவர்கள் வார்த்தைக்குப் பிடிகொடுக்காமலே நாளைக் கடத்திக் கொண்டு வருகிறேன். லீலா அதோ பார்த்தாயா! இப்பொழுதுதான் வானத்தில் பூரணச் சந்திரன் உதயமாகிறான். ஆஹா!

(பாலு - லீலா - பாட்டு)

பாலு : ஒளி நிலவின் எழில் பாராய்!

லீலா : உமையே நிகராமோ!

(ஓ)

பாலு : களிநடமிடு மயில் போலே!

லீலா : காதலரே நாமே!

பாலு : பூதல் மேல் மகிழ்வோம்

(ஓ)

லீலா : இனிதாகும் மலராவேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/36&oldid=1027114" இலிருந்து மீள்விக்கப்பட்டது